For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு ஆப்படிக்குமா இங்கிலாந்து..? வரலாற்று சேசிங்கை நோக்கி ரூட், ஸ்டோக்ஸ்..! ரசிகர்கள் டென்ஷன்

லீட்ஸ்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்டில், கேப்டன் ஜோ ரூட் அரைசதத்துடன் களத்தில் நிற்க, தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கிலாந்தில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. உலக கோப்பையை விட இந்த இரு அணிகளும் ஒவ்வொரு முறையும் இந்த தொடரில் தான் ஆக்ரோஷமாக விளையாடும்.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. 2வது டெஸ்ட் தட்டு தடுமாறி டிரா செய்ய, 1க்கு 0 என்ற முன்னிலையில் இருக்கிறது. 3வது டெஸ்ட் போட்டி, லீட்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

283 ரன்கள்

283 ரன்கள்

அதில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 67 ரன்கள் எடுத்தது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா, 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து 283 ரன்கள் முன்னிலை பெற்றது.

246 ரன்களுக்கு அவுட்

246 ரன்களுக்கு அவுட்

3வது நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, மார்னஸ் லபுஷேன் அரைசதம் அடித்து கைகொடுக்க, மற்ற வீரர்கள் யாரும் கை விட்டனர். ஆஸி. 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்துக்கு 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

வெற்றி கண்டதில்லை

வெற்றி கண்டதில்லை

359 ரன்கள் என்பது இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு. ஏன் என்றால், இங்கிலாந்து தமது வாழ்நாளில் ஒருமுறை கூட 359 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றி கண்டதில்லை. அதிகபட்சமாக அந்த அணி வெற்றிகரமாக விரட்டியது 332 ரன்கள் மட்டுமே.

சொதப்பல் துவக்கம்

சொதப்பல் துவக்கம்

ஆகவே ஒரு பெரிய இலக்கை நோக்கி முன்னேறி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது இங்கிலாந்து. இது ஒரு வகையில் ஆஸிக்கு சாதகமான விஷயம். ஆனாலும் களத்தில் கதை வேறாக மாறி கொண்டிருக்கிறது. இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு, துவக்க வீரர்களான ஜேசன் ராய் 8 ரன்கள், பர்ன்ஸ் 7 ரன்கள் என்று சொதப்பல் துவக்கம் அளித்தனர்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

அடுத்து வந்த கேப்டன் ரூட், டென்லே பொறுப்பாக ஆடினர். ஆஸி. பந்தை அசால்ட் பண்ணிய ரூட், அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 126 ரன்கள் குவித்தது. ஆனால் களத்தில் நின்று கை கொடுத்த டென்லே 50 ரன்களில் வெளியேறினார்.

203 ரன்கள் தேவை

203 ரன்கள் தேவை

3வது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் பாக்கி. வெற்றிக்கு 203 ரன்கள் தேவை. இங்கிலாந்து அணியிடம் 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. ரூட்டும், 2 ரன்களுடன் இருக்கும் ஸ்டோக்சும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும்.

வாய்ப்பு இருக்கிறது

வாய்ப்பு இருக்கிறது

மிக விரைவாக விக்கெட்டுகளை காலி செய்தால் மட்டுமே ஆஸி.க்கு ஜெயம் கிடைக்கும். அது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை. ஸ்மித்துக்கு நிகரானவர் ரூட். ஆனால் இந்த தொடரில் தடுமாறி வரும் அவருக்கு ஒரு அல்வா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. செய்வாரா என்று தெரியவில்லை.

Story first published: Sunday, August 25, 2019, 11:56 [IST]
Other articles published on Aug 25, 2019
English summary
England needs another 203 runs to win in ashes 3rd test against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X