For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினின் முக்கிய சாதனையை தகர்க்க போகும் ஜோ ரூட்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.. முழு விவரம்

ஆஸ்திரேலியா: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சனின் சாதனை முறியடிக்க இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நெருங்கிவிட்டார்.

உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

3 இளம் வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த பி.சி.சி.ஐ. – என்ன நடந்தது?3 இளம் வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த பி.சி.சி.ஐ. – என்ன நடந்தது?

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி சற்று சறுக்கி வருகிறது.

 முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

காபா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 425 ரன்கள் என்ற அசாத்திய ஸ்கோருடன் முன்னிலை பெற்றது. இதனால் 2வது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணி சொதப்பி மோசமான தோல்வி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சூப்பர் கம்பேக்

சூப்பர் கம்பேக்

ஆனால் அதனை மாற்றி அமைத்தது ஜோ ரூட் - டேவிட் மாலன் ஜோடி. இவர்கள் இருவரும் 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 220- 2 என்ற ரன்களுடன் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் பல்வேறு முக்கிய சாதனைகளை படைத்தார்.

புதிய சாதனை

புதிய சாதனை

ஜோ ரூட் தற்போது வரை 158 பந்துகளில் 86 ரன்களை குவித்து விளையாடி வருகிறார். இந்த ரன்களுடன் சேர்த்து ஜோ ரூட் இந்தாண்டு மட்டும் 25 இன்னிங்ஸ்களில் 1,541 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னர் மைக்கேல் வாகன் முதலிடம் வகித்து வந்த நிலையில் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

சச்சினின் சாதனை முறியடிப்பு?

சச்சினின் சாதனை முறியடிப்பு?

இந்நிலையில் சச்சினின் பெரும் சாதனை ஒன்றையும் ஜோ ரூட் முறியடிக்க காத்துள்ளார். அதாவது ஜோ ரூட் இன்னும் 22 ரன்களை அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கை முந்தி 5வது இடத்தை பிடிப்பார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010ம் ஆண்டு 1,562 ரன்கள் குவித்தார். ரிக்கி பாண்டிங் 2005ம் ஆண்டு 1,544 ரன்களை குவித்தார்.

பட்டியலில்

பட்டியலில்

இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசஃப் உள்ளார். அவர் 2006ம் ஆண்டு 1,788 ரன்களை விளாசினார். அவருக்கு அடுத்த இடங்களில் விவ் ரிச்சர்ட்ஸ் (1,710 ரன்கள்), க்ரீம் ஸ்மித் ( 1,656 ரன்கள்), மைக்கேல் க்ளார்க் ( 1,595 ரன்கள்) ஆகியோரு உள்ளனர்.

Story first published: Friday, December 10, 2021, 19:54 [IST]
Other articles published on Dec 10, 2021
English summary
England Player Joe Root eye on breaking massive record of Sachin tendulkar in Gabba Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X