For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயோ பாவம்.. அறிமுக போட்டியே இன்னும் முடியல.. அதுக்குள்ள 7 மாசம் சஸ்பெண்ட்..இங்கிலாந்து வீரரின் நிலை

இங்கிலாந்து: அறிமுகமான போட்டியே இன்னும் முடிவடையாத நிலையில் 7 மாதங்கள் சஸ்பெண்ட் ஆக உள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒல்லி ராபின்சன்.

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலகின் நம்பர்.1 பேட்ஸ்மேன் காலி.. 17 வருஷமாச்சு.. இன்னமும் ஆண்டர்சன் மாஸ் குறையலஉலகின் நம்பர்.1 பேட்ஸ்மேன் காலி.. 17 வருஷமாச்சு.. இன்னமும் ஆண்டர்சன் மாஸ் குறையல

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 378 ரன்களை குவித்தது.

புகழாரம்

புகழாரம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 378/10 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான டேவான் கான்வே 200 ரன்கள் அடித்து அறிமுக போட்டியிலேயே அசத்தினார். மேலும் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுக வீரரான ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பவுன்சர் போன்றவற்றைச் சிறப்பாக வீசி ஒல்லி ராபின்சன் இங்கிலாந்து ரசிகர்களைப் வியக்கவைத்தார். இதனால், இணையத்தில் ராபின்சன் குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன. ஒரி சிலர் இங்கிலாந்து அணியின் எதிர்கால நட்சத்திர வீரர் என புகழ்ந்து தள்ளினர். ஆனால் அந்த புகழ்ச்சிகள் அது அன்றைய தினம் மாலை வரை கூட நிலைக்கவில்லை. இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட்தான் தான் என தெரியவந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளைப் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வந்தனர்.

ராபின்சன் விளக்கம்

ராபின்சன் விளக்கம்

இதனால் உடனடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராபின்சன், தான் அறியாத வயதில் விவரம் தெரியாத செய்த செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி தான் செய்த தவறுக்கு வெட்கப்படுகிறேன் என்றும், தான் இனவெறியனோ அல்லது செக்ஸ் வெறியனோ அல்ல என்பதையும் தெளிவுபடுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.

 தண்டனை விவரம்

தண்டனை விவரம்

ஆனால் ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத கிரிக்கெட் வாரியம் அவரது இந்த ட்வீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. அதன்படி அவர் ட்வீட் போட்டுள்ளது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Sunday, June 6, 2021, 13:39 [IST]
Other articles published on Jun 6, 2021
English summary
England Player Ollie Robinson faces ban for 8 years old tweets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X