For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து ப்ளேயிங் 11 அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய அசுர வீரர்.. இந்தியாவுக்கு காத்துள்ள சவால்!!

பிர்மிங்கம்: இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் அதிகாரப்பூர்வ ப்ளேயிங் 11 அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

India-வுக்கு எதிரான England-ன் T20, ODI Squad அறிவிப்பு | Aanee's Appeal | *Cricket

இரு அணிகளும் மோதும் 5வது டெஸ்ட் போட்டி நாளை மதியம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

பிர்மிங்கமில் உள்ள புகழ்பெற்ற எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவிருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி பிளேயிங் லெவன்.. பிசிசிஐ எடுத்த புதிய முடிவுஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி பிளேயிங் லெவன்.. பிசிசிஐ எடுத்த புதிய முடிவு

ப்ளேயிங் 11 வெளியீடு

ப்ளேயிங் 11 வெளியீடு

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. எனினும் இதற்கான ப்ளேயிங் 11 தான் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியை எதிர்க்கப்போகும் பலமான இங்கிலாந்து ப்ளேயிங் 11 அறிவிக்கப்பட்டுள்ளது.

 அட்டகாச பேட்டிங் வரிசை

அட்டகாச பேட்டிங் வரிசை

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஓப்பனிங் வீரர்களாக ஜாக் க்ராவ்லே மற்றும் அலெக்ஸ் லீஸ் களமிறங்கவுள்ளனர். மிடில் ஆர்டரில் ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் என படு சூப்பரான ஃபார்மில் இருக்கும் வீரர்கள் களம் காணுகின்றனர். இவர்கள் நியூசிலாந்து தொடரில் அடுத்தடுத்து சதமடித்தவர்கள் ஆகும்.

பென் ஃபோக்ஸுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், அவரின் இடத்திற்கு சாம் பில்லிங்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பவுலிங் படை என்ன?

பவுலிங் படை என்ன?

பந்துவீச்சை பொறுத்தவரையில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடன் ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், மேத்யூவ் பாட்ஸ் ஆகியோர் கைக்கொடுக்கவுள்ளனர். இதில் ஆண்டர்சன் - பிராட் ஜோடி இந்த மைதானத்தில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய ஜோடி ஆகும்.

பவுலிங்கில் புது திட்டம்

பவுலிங்கில் புது திட்டம்

இங்கிலாந்து அணி தனது பவுலிங் படையில் பென் ஸ்டோக்ஸுடன் சேர்த்து மொத்தம் 5 வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகின்றனர். ஒரு முழு நேர ஸ்பின்னர் கூட கிடையாது. அதற்கு மாறாக கூடுதல் பேட்ஸ்மேனை இணைத்துக் கொண்டுள்ளது. ஸ்பின்னர் ஒருவேளை தேவைப்பட்டால் ஜோ ரூட் பந்துவீசுவார்.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ஜாக் க்ராவ்லே, அலெக்ஸ் லீஸ், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மேத்யூவ் பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Story first published: Thursday, June 30, 2022, 23:55 [IST]
Other articles published on Jun 30, 2022
English summary
England Playing 11 for 5th test ( இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் ) இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து ப்ளேயிங் 11 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X