டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு..மொயின் அலியின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?அவரே கூறிய பரபர தகவல்

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Moeen Ali to retire from Test cricket | OneIndia Tamil

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவர் மொயின் அலி. 34 வயதான மொயின் அலி, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காகச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அதேபோல ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சென்னை அணிக்காக ஆண்டி வரும் மெயின் அலி தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி ஒன்றை மொயின் அலி வெளியிட்டுள்ளார்.

சபாஷ் சரியான போட்டி.. ஐபிஎல்-ன் முதல் டபுள் ஹெட்டர்ஸ்.. அதிரடி மாற்றத்தோடு மோதும் டெல்லி - ராஜஸ்தான் சபாஷ் சரியான போட்டி.. ஐபிஎல்-ன் முதல் டபுள் ஹெட்டர்ஸ்.. அதிரடி மாற்றத்தோடு மோதும் டெல்லி - ராஜஸ்தான்

மொயின் அலி

மொயின் அலி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான மொயின் அலி சர்வதேச டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தான் டெஸ்ட் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடியதாகக் கூறிய மொயின் அலி சில சமயங்களில் டெஸ்ட் போட்டிகளின் தீவிரம் மிக அதிகமாகச் செல்லும் என்றும் குறிப்பிட்டார். 34 வயதான மொயின் அலி, தன்னால் முடிந்தவரை கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட விரும்புவதாகக் கூறினார். டெஸ்ட் போட்டிகளில் தான் இதுவரை சாதித்ததை நினைத்து மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்றார்

ஓய்வு பெற்றார்

தனது ஓய்வு குறித்து மொயின் அலி கூறுகையில், "எனக்கு இப்போது 34 வயது ஆகிறது. என்னால் முடிந்தவரை கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன், இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட் அற்புதமான ஒன்று. உங்களுக்குச் சிறப்பான நாள் அமைந்தால், மற்ற அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளைக் காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் ஒரே நாளில் உங்களால் அதிகம் சாதிக்க முடியும். டெஸ்ட் போட்டிகளில் உங்கள் திறமையால் அதிகம் சாதித்தாக நீங்கள் உணர்கிறீர்கள்.

டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகள்

உலகின் மிகச் சிறந்த ஆட்டகாரர்களுடன் விளையாடும் போது, டெஸ்ட் போட்டிகள் மிகவும் திருப்திகரமான ஒரு உணர்வைத் தரும். பவுலிராக என்னால் சிறந்த ஒரு பந்தில் யாரையும் வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்குப் பின் நமக்குக் கிடைக்கும் திருப்தி அலாதியானது. அதேநேரம் டெஸ்ட் போட்டிகளின் தீவிரம் சில சமயங்களில் அதிகமாகும் என்பதும் உண்மை தான். டெஸ்ட் போட்டிகளில் நான் இதுவரை சாதித்ததை நினைத்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன்.

கடைசி டெஸ்ட்

கடைசி டெஸ்ட்

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் நான் இந்த முடிவை எடுத்தேன். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவிருந்த கடைசி போட்டியை நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஏனென்றால் சில விஷயங்களை நாம் பெர்சனலாக சாதிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டவுடன் நான் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

என்ன காரணம் தெரியுமா

என்ன காரணம் தெரியுமா

என்னால் கடந்த காலங்களைப் போல டெஸ்ட் போட்டிகளில் முழு கவனத்துடன் விளையாட முடியவில்லை. கடந்த காலங்களிலும் நான் சில மோசமான ஆட்டங்களை ஆடியிருக்கிறேன். ஆனால், இப்போது போல கவனம் செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டதில்லை. ஆனால், இந்த சமயத்தில் கவனம் செலுத்துவதே எனக்குப் பெரிய சிரமமாக உள்ளது. இதனால் தான் நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இதுவரை தனக்கு ஆதரவளித்து வந்த பெற்றோர், குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், இங்கிலாந்து அணியின் கேப்டன்கள் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மொயின் அலி

மொயின் அலி

கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மொயின் அலி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேன் ஆன மொயின் அலி 5 சதம் 14 அரைசதங்களுடன் மொத்தம் 2914 ரன்களை அடித்துள்ளார். அதேபோல வலது கை ஸ்பீன் பந்து வீச்சாளரான அவர், 195 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 5 முறை ஐந்திற்கும் அதிகமான விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK star all-rounder retired from international test cricket. Moeen Ali latest news.
Story first published: Monday, September 27, 2021, 14:56 [IST]
Other articles published on Sep 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X