For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகல்.. இங்கிலாந்தின் நம்பர் 1 கேப்டன்.. அடுத்த கேப்டன் யார்?

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.

Recommended Video

Joe Root steps down as England Test captain | OneIndia Tamil

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் 2017ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.

ஜோ ரூட் இதுவரை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக 27 வெற்றிகளை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மைக்கேல் வாஹன் 26 போட்டியிலும், ஸ்ட்ராஸ் மற்றும் குக் தலா 24 போட்டியிலும் வென்றுள்ளனர்.

30 ஓவரில் 50 ரன்கள்.. டெஸ்ட்டில் தாலாட்டு பாடிய இங்கிலாந்து வீரர்கள்.. கேப்டன் ஜோ ரூட் 25வது சதம்30 ஓவரில் 50 ரன்கள்.. டெஸ்ட்டில் தாலாட்டு பாடிய இங்கிலாந்து வீரர்கள்.. கேப்டன் ஜோ ரூட் 25வது சதம்

ஜோ ரூட் வெற்றிகள்

ஜோ ரூட் வெற்றிகள்

ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவை 4க்கு1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இதே போன்று தென்னாப்பிரிக்க மண்ணில் 3க்கு1 என்ற கணக்கில் ஜோ ருட் தலைமையிலான அணி வென்றுள்ளது. மேலும் இலங்கையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையையும் ஜோ ருட் படைத்தார்.

நம்பர் 1 கேப்டன்

நம்பர் 1 கேப்டன்

இதே போன்று அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதுவரை டெஸ்ட் கேப்டனாக ரூட் 5295 ரன்களை விளாசியுள்ளார். இதில் 12 சதங்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். சமீப காலமாக இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்து 2 தொடரை இங்கிலாந்து அணி இழந்தது மேலும் அணி வீரர்கள் ரூட்டுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எனினும் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலக மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தொடர் தோல்வியின் காரணமாக விலகிய நிலையில், தற்போது ஜோ ரூட்டும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் பதவியை எதிர்பார்த்து தான் ஐபிஎல் தொடரில் ஸ்டோக்ஸ் விளையாடாமல் புறக்கணித்தார் என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, April 15, 2022, 16:46 [IST]
Other articles published on Apr 15, 2022
English summary
England Test captain Joe root resigns – and his captaincy record டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகல்.. இங்கிலாந்தின் நம்பர் 1 கேப்டன்.. அடுத்த கேப்டன் யார்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X