For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: 3 டக் அவுட்டுகள்..! எந்த கேப்டனுமே பண்ணாத மோசமான சாதனை..! பறிபோகிறதா தலைமை பதவி?

Recommended Video

Watch Video : Australia won Ashes 2019 series

லண்டன்: ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் ஆஸி. வெல்ல, இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட் கடும் நெருக்கடியில் இருக்கிறார். இந்த தொடரில், 3 முறை டக் அவுட்டாகி சாதனை படைத்திருக்கிறார்.

லண்டன் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற 4 வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்டீவ் ஸ்மித்தின் அபார இரட்டை சதம் கை கொடுக்க, 497 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை எட்டியது.

இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 196 ரன்கள் அதிகம் பெற்று 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 186 ரன்களுடன் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

வெற்றி இலக்கு

வெற்றி இலக்கு

அதன் பின்னர் 383 ரன்கள் வெற்றி இலக்கு என இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட, 2வது இன்னிங்சை தொடங்கியது. 4வது ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 18 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

விழுந்தன விக்கெட்டுகள்

விழுந்தன விக்கெட்டுகள்

இந்நிலையில் 5 ம் நாள் ஆட்டத்தில் ஜோ டென்லி மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் களமிறங்கினர். 31 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய், கம்மின்சின் பந்து வீச்சில் போல்ட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னுக்கும், ஜோ டென்லி 53 ரன்களுக்கும் வெளியேறினர். பிறகு ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவும், ஜோஸ் பட்லரும் ஆட்டத்தை டிரா செய்வதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சொதப்பினர்

சொதப்பினர்

25 ரன்கள் எடுத்திருந்த பேர்ஸ்டோவ், ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களும் சொதப்பி தள்ள, இங்கிலாந்து 197 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி தொடங்குகிறது.

3 முறை டக்

3 முறை டக்

இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்து கேப்டன், ஜோ ரூட் 3 முறை முதல் பந்தில் டக் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது 2வது, 3வது மற்றும் 4வது டெஸ்டில் அவர் டக் அவுட்டாகி இருக்கிறார். தமது கடைசி டெஸ்ட் போட்டிகளில் 3 முறை டக் அவுட்.

டெஸ்ட் வரலாற்றில் சாதனை

ஆஷஸ் தொடரில் 4வது போட்டியில், ஜோ ரூட் தனது 2வது இன்னிங்சை முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இதன் மூலம், டெஸ்ட் கேப்டன்கள் வரலாற்றில் ஒரே தொடரில் 3 முறை டக் அவுட் ஆகி சாதனை படைத்துள்ளார்.

கேப்டன் பதவி காலி?

கேப்டன் பதவி காலி?

இங்கிலாந்து அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்பட்ட ஜோ ரூட்டின் இந்த ஆஷஸ் தொடர் பர்பார்மன்ஸ் மிக மோசமாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து அவர் இதுபோன்று விளையாடினால், கேப்டன் பதவிக்கு ஆபத்தாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் வார்னிங் கொடுத்திருக்கின்றனர்.

Story first published: Monday, September 9, 2019, 11:43 [IST]
Other articles published on Sep 9, 2019
English summary
England test captain joe root scored 3 times duck out in last 5 test matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X