For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்குத்தான் அப்பவே தடை பண்ண சொன்னோம்.. பாருங்க இந்திய மேட்சில் எவ்வளவு குழப்பம்.. ஷாக் சம்பவம்!

அகமதாபாத்: இங்கிலாந்து அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் வரிசையாக அம்பயர்ஸ் கால் காரணமாக அவுட் ஆகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்டில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்கள். வரிசையாக இங்கிலாந்து அணி 90 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருப்பதால் இங்கிலாந்து அணி கடுமையாக திணறி வருகிறது. அக்சர் பட்டேல் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்கள்.

அஸ்வின்

அஸ்வின்

இதில் அஸ்வின் 2 விக்கெட், அக்சர் பட்டேல் 3 விக்கெட், இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்துள்ளனர். இதனால் இங்கிலாந்து கடுமையாக திணறி வருகிறது. இதில் ஜோ ரூட் அஸ்வின் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆனார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் அக்சர் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆனார்.

எப்படி?

எப்படி?

இன்னொரு பக்கம் சாக் கிரவ்லி இதேபோல் அக்சர் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆனார். இவர்கள் மூன்று பேருமே ஒரே மாதிரி அவுட் ஆனார்கள். பந்து ஸ்டம்பை லேசாக உரசி சென்று அவுட் ஆனார்கள். இதில் ஸ்டோக்ஸ், ரூட் ரிவ்யூ கேட்டனர். இதில் அம்பயர்ஸ் கால் என்று கொடுக்கப்பட்டதால் விக்கெட் திரும்ப பெறப்படவில்லை.

விக்கெட்

விக்கெட்

நடுவர் விக்கெட் கொடுத்து இருந்ததால் ரிவ்யூவிலும் விக்கெட் என்றே கொடுக்கப்பட்டது. இதற்கு முன் சாக் கிராவ்லிக்கு இதேபோல் எல்பிடபிள்யூ கேட்கப்பட்டது. அப்போது நடுவர் விக்கெட் கொடுக்காததால் ரிவ்யூவியும் விக்கெட் கொடுக்கப்படவில்லை.

விதி எப்படி

விதி எப்படி

இந்த அம்பயர்ஸ் கால் விதி காரணமாக களத்தில் கடுமையான குழப்பம் ஏற்பட்டது. கடந்த போட்டியில் அம்ப்யர்ஸ் கால் மூலம் தப்பித்த ரூட் இந்த முறை அதே அம்பயர்ஸ் கால் மூலம் அவுட் ஆனார். டிஆர்எஸ் ரிவ்யூவில் இருக்கும் இந்த அம்பயர்ஸ் கால் முறை கடும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

டிஆர்எஸ்

டிஆர்எஸ்

டிஆர்எஸ் முறையில் அம்பயர்ஸ் கால் என்ற அம்சம் உள்ளது. எல்பிடபிள்யூ போன்ற விக்கெட்டுகளின் போது இந்த அம்சம் பயன்படுத்தும். பொதுவாக பந்து சரியாக லைனில் குத்தி, ஸ்டம்பில் மோதுவது போல சென்றால் அது எல்பிடபிள்யூ ஆகும். ஆனால் அம்பயர்ஸ் கால் கொஞ்சம் வித்தியாசமானது.

பந்து ஸ்டம்ப்

பந்து ஸ்டம்ப்

இந்த அம்பயர்ஸ் கால் மூலம் பந்து லேசாக ஸ்டம்பை உரசுவது போல சென்றால்,பந்து முழுமையாக ஸ்டம்பில் குத்தாமல் சென்றால், அவுட் சைட் ஸ்டம்பில் குத்தினால் அது அம்பயர்ஸ் கால் என்று அழைக்கப்படும். இதில் ரிவ்யூவிற்கு முன் நடுவர் என்ன தீர்ப்பு கொடுத்தாரோ அதே தீர்ப்பு வழங்கப்படும்.

தடை

தடை

இந்த முறையை தடை செய்ய வேண்டும். ரிவ்யூவில் மூன்றாவது நடுவர் கொடுக்கும் முடிவையே கடைசி முடிவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஐசிசி இதை தீவிரமாக கருத்தில் கொண்டு உள்ளது. விரைவில் இந்த விதிமுறை நீக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Wednesday, February 24, 2021, 18:18 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
England top order lost too many wickets due to Umpires call in the 3rd test against India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X