For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்- பிளேயிங் லெவன்,எந்த சேனலில் பார்க்கலாம்.!!.

பிரிஸ்பேன்: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது

Recommended Video

Ashes 2021: England rest James Anderson for the Brisbane Test | OneIndia Tamil

கடந்த ஆஷஸ் தொடர் 2க்கு2 என்ற கணக்கில் டிராவானதால் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்து கொண்டது.

இதனால் ஆஷஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி உள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 10 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி 9 போட்டிகளில் தோல்வியை தழுவியது. மேலும் காபா மைதானத்தில் கடந்த 35 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் வென்றதே இல்லை என்ற சோகமான வரலாறும் நீடிக்கிறது.இங்கிலாந்து அணியின் சிறந்த கேப்டன் என்ற வரலாற்றை படைக்க வேண்டும் என்று ரூட் நினைத்தால், அதற்கு அவர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும்.

England vs Australia Ashes 1st Test Tommorow Preview. Playing xi. Telecast details

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பென் ஸ்டோக்சும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து கிரிக்கெட் போட்டியிலேயே விளையாடவில்லை. இதனால் அவரால் பந்துவிச முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாரிஸ்டோவிற்கு பதிலாக ஆலிவ் போப் அணியில் இடம்பெறுவார் என தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோல்வி, டிம் பெயினின் விவகாரம் என ஆஸ்திரேலிய அணியும் சர்ச்சையில் சிக்கியது. தற்போது புது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாட் கம்மின்ஸ், புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார்.

பிளேயிங் வெலன்

ஆஸ்திரேலிய அணி- 1.டேவிட் வார்னர், 2 மார்கஸ் ஹாரிஸ், 3,மார்னஸ் லாபஸ்சேங், 4.ஸ்மித். 5.டிராவிஸ்ஹேட், 6, கேமரான் கிரின், 7.அலெக்ஸ் கேரி, (அறிமுகம்) 8,பாட் கம்மின்ஸ் (கேப்டன்) 9,மிட்செல் ஸ்டார்க், 10,லயான், 11,ஜோஷ் ஹேசல்வுட்

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

இங்கிலாந்து அணி- 1. ரோரி பெர்ன்ஸ், 2,ஹசிப் ஹமீது, 3,டேவிட் மாலன், 4,ஜோ ரூட், 5,பென் ஸ்டோக்ஸ், 6,ஆலிவ் போப், 7,ஜாஸ் பட்லர், 8,கிறிஸ் வொக்ஸ், 9,ராபின்சன், 10,மார்க் வுட் 11, பிராட்/ஜாக் லீச்

இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கும் சோனி சிக்ஸ்(ஆங்கிலம்), சோனி டென் 3(ஹிந்தி), சோனி 4 ( தமிழ்), சோனி லிங் ஆப் மூலம் ஆஷஸ் தொடரை கண்டுகளிக்கலாம்

Story first published: Tuesday, December 7, 2021, 23:53 [IST]
Other articles published on Dec 7, 2021
English summary
Here is the England vs Australia Ashes 1st Test Preview. Playing xi. Telecast details. Anderson set to Miss and Australia announced playing xi for the First Test.Sony Network is the official broadcaster in India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X