For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

க்ருணால் விட்டா அடிச்சிருப்பாரு போல... டாம் கரண் மேல அவ்ளோ கோவம்.வேடிக்கை பார்த்த கோலி..என்ன காரணம்

புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் க்ருணால் பாண்டியாவுக்கும் - சாம் கரணுக்கு கடும் மோதல் போக்கு வெடித்துள்ளது.

நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி திடீர் திருப்பத்தால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3 குழந்தைகளுக்கு அம்மா... மாநில சாம்பியன்ஷிப்புல வெள்ளி பதக்கம்... கனவு நிறைவேறுமா? 3 குழந்தைகளுக்கு அம்மா... மாநில சாம்பியன்ஷிப்புல வெள்ளி பதக்கம்... கனவு நிறைவேறுமா?

இந்நிலையில் போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய க்ருணால் பாண்டியாவை சாம் கரண் வார்த்தைகளால் சீண்டியதால் மோதல் போக்கு நிலவியது. இதனை கோலி வேடிக்கை பார்த்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பேட்டிங்கில் ஷிகர் தவான், விராட் கோலி ஒரு புறம் அசத்தினாலும், கே.எல்.ராகுல் மற்றும் க்ருணால் பாண்டியாவின் ஆட்டம் தனி கவனத்தை பெற்றது. குறிப்பாக அறிமுக போட்டியிலேயே அதிரடி காட்டிய க்ருணால் பாண்டியாவின் ஆட்டம்.

அதிரடி

அதிரடி

30 வயதான க்ருணால் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகத்திற்குரிய தொப்பியை அவரது தம்பி ஹர்திக் பாண்டியா வழங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். அதே உணர்ச்சியோடு களமிறங்கி அவர் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதனால் அவர் 26 பந்துகளில் தனது அரை சதத்தை அடித்தார். சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மொத்தமாக அவர் 31 பந்துகளில் 58 ரன்களை எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

மோதல்

ஆட்டத்தின் 49வது ஓவரை டாம் கரண் வீச, முதல் பந்திலேயே க்ருணால் பாண்டியா தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் அதே ஓவரில் 5வது பந்தை வைடு கொடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் போடப்பட்ட பந்தில் க்ருணால் சிங்கில் அடித்து ஒடி வந்தார். அப்போது க்ருணாலிடம் டாம் கரண் வைடு பந்து பற்றி ஏதோ கூற க்ருணால் பாண்டியா ஆத்திரமடைந்துள்ளார். டாம் கரணை நோக்கி வேகமாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விராட் கோலி

விராட் கோலி

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வீரர் பட்லர் சமாதானம் செய்து வைத்தபோது க்ருணாலுக்கும் டாம் கரணுக்கு மோதல் அடங்கவில்லை. தொடர்ந்து டாம் கரணை நோக்கி க்ருணால் வேகமாக சென்றார். இதனையடுத்து நடுவர் தலையிட்டு கட்டுக்கொள் கொண்டுவந்தார். இவை அனைத்தையும் வெளியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த விராட் கோலி, என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்துடன் இருந்தார்.

Story first published: Wednesday, March 24, 2021, 11:36 [IST]
Other articles published on Mar 24, 2021
English summary
Krunal Pandya and Tom Curran engaged in a heated argument in 1st ODI - Watch
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X