சோனமுத்தா போச்சா...ரோகித்திற்காக ஓவர் பில்ட் அப் கொடுத்த அஸ்வின்.... நெட்டிசன்களால் டோட்டல் டேமேஜ்!

கொடுத்து செய்த ஒரு விஷயம் முற்றிலும் பல்ப் கொடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா..... உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சலசலப்பு... விவரம் இதோ!

இதில் ரோகித் சர்மா எப்படி ஆடுவார் பாங்க என்பதுபோல் பில்ட் அப் கொடுத்த அஸ்வினுக்கு அதுவே ட்ரோல் வீடியோக்களையும் வாங்கிக்கொடுத்துள்ளது.

3வது போட்டி

3வது போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் - ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இந்த ஜோடியை அடில் ரஷித் பிரித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா குறைந்த ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

ட்வீட்

ட்வீட்

ரோகித் சர்மா ஒருபுறம் அவுட்டானாலும், அதற்காக நிறைய ட்ரோல் செய்யப்படுபவர் அஸ்வின் ஆகும். இதற்கு காரணம் அவர் போட்ட ஒற்றை ட்வீட். போட்டிக்கு முன்னர் ட்வீட் போட்ட அஸ்வின், ஒருநாள் போட்டியில் இதுவரை ஒரு முறை மட்டுமே 400 ரன்கள் இலக்கை எட்டப்பட்டுள்ளது மற்று ரோகித் சர்மா 3 முறைதான் இரட்டை சதம் அடித்துள்ளார் என பதிவிட்டார். அதாவது, ரோஒகித் சர்மா கண்டிப்பாக பெரிய ஸ்கோர் அடிப்பார் என்றும் இங்கிலாந்து அணி 400 ரன்களை துரத்த தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அஸ்வினின் ட்வீட்டால் ரோகித்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரோ வெறும் 7 ரன்களுக்கு அடில் ரஷித் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதனால் அனைவரும் அப்படியே அஸ்வின் பக்கம் பார்வையை திருப்பினர். பின்னர் அந்த ட்வீட்டை தானே டெலிட் செய்துவிட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய அணியில் ரோகித் சர்மா அவுட்டான பிறகு ரிஷப் பண்ட் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி காட்டினர். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 64 ரன்களும், எடுத்து அவுட்டாகினர். பின்னர் வந்தவர்கள் சீராக ரன் சேர்க்க 48.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களை இழந்து 329 ரன்களை எடுத்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
England vs India: Ashwin jinxes Rohit Sharma during the 3rd ODI, deletes tweet later
Story first published: Sunday, March 28, 2021, 18:00 [IST]
Other articles published on Mar 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X