ஆகஸ்ட் 4 வரை காத்திருக்க தேவையில்லை.. பிசிசிஐ-ன் முக்கிய கோரிக்கை.. பச்சைக்கொடி காட்டிய இங்கிலாந்து!

மும்பை: டெஸ்ட் தொடருக்காக பிசிசிஐ வைத்த முக்கிய கோரிக்கைக்கு கொரோனா அச்சுறுத்தலையும் மீறி இங்கிலாந்து வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வரும் சூழலில் இந்திய வீரர்களுக்காக பிசிசிஐ முக்கிய கோரிக்கை ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் வைத்தது.

 பிசிசிஐ-ன் கோரிக்கை

பிசிசிஐ-ன் கோரிக்கை

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் தொடங்க இன்னும் 5 வாரங்கள் உள்ளதால் வீரர்களுக்கு இங்கிலாந்து அணியுடன் முதல் தர பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்ய பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

முக்கிய போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி, முதல் தர பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடும். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இண்ட்ரா ஸ்குவாட் போட்டியில் மட்டுமே விளையாடியது. முதல் தர பயிற்சி போட்டி நடத்தப்படவில்லை. இதன் விளைவாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்தது என பேச்சுக்கள் உலா வருகின்றன.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இந்நிலையில் பயிற்சி போட்டிகளுக்கு இங்கிலாந்து வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகள் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தின் கவுண்டி அணிகளுடனும் இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

போட்டிகள் எங்கு?

போட்டிகள் எங்கு?

இந்த இரண்டு போட்டிகளும் துர்ஹாம் நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருப்பதால், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோரை ஓப்பனிங் களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ECB Gives Green signal for BCCI Request of warm-up games for Team India to prepare
Story first published: Friday, July 2, 2021, 15:48 [IST]
Other articles published on Jul 2, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X