இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்களா? சுதாரித்துக்கொள்வாரா கோலி...3வது போட்டியில் வெற்றி யாருக்கு?

புனே: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி மாற்றம் குறித்து கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று புனேவில் தொடங்குகிறது.

ராஜ ஓட்டம் போடும் சிஎஸ்கேவின் புதிய பேருந்து... தலயோட வரைபடம் சூப்பருங்க

கடந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு மோசமாக இருந்த நிலையில் இந்த போட்டியில் அணியில் 2 மாற்றங்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று புனேவில் தொடங்கவிருக்கிறது. டெஸ்ட் & டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்தும், தொடரை முழுவதுமாக வெல்ல இந்தியாவும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

திணறல்

திணறல்

முதல் போட்டியை போன்றே 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் இலக்கை வைத்தது. ஆனால் இங்கிலாந்து அணி சுலபமாக வெற்றி கண்டது. இந்திய அணியில் 5 பவுலர்களில் புவனேஷ் குமார், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே ஓரளவிற்கு கட்டுப்படுத்த, மற்றவர்கள் திணறினர்.

 இந்திய அணி மாற்றம்

இந்திய அணி மாற்றம்

எனவே இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த இந்திய அணியில் 2 முக்கிய மாற்றம் பந்துவீச்சில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய குல்தீப் மற்றும் க்ருணால் பாண்டியாவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திர சஹால் சேர்க்கப்படலாம். குல்தீப் - க்ருணால் இருவரும் சேர்ந்து கடந்த போட்டியில் 16 ஓவர்கள் வீசி 156 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

கடந்த 2 போட்டியிலும் பேட்டிங் மிகச் சிறப்பாகவே இருந்ததால் பேட்டிங்கில் எந்த மாற்றமும் வர வாய்ப்புகள் குறைவு.

அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்த்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், பிரஷித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Team India predicted Playing XI for 3rd ODI agains England
Story first published: Sunday, March 28, 2021, 11:47 [IST]
Other articles published on Mar 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X