இப்படியெல்லாம் ஒரு விக்கெட்டா..?? இங்கி, - நியூசி, டெஸ்டில் வினோதம்.. திகைத்துப்போன ஹென்ரி நிகோல்ஸ்

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் அவுட்டான விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணி ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றிய சூழலில் நேற்று 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

தடுமாறிய நியூசிலாந்து

தடுமாறிய நியூசிலாந்து

நியூசிலாந்து அணியில் டாம் லாதம் (0), வில் யங் (20), வில்லியம்சன் (31) என அடுத்தடுத்து 3 விக்கெட்கள் சரிந்த போது, ஹென்ரி நிகோல்ஸ் மற்றும் டேர்லி மிட்செல் ஆகியோர் நிதானமாக ரன்களை அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நீண்ட நேரமாக தொடர்ந்த இந்த பார்ட்னர்ஷிப்பில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவிடவில்லை. இதற்கு காரணம் ஹென்ரி நிகோலஸின் விக்கெட் தான்.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் வீசிய ஃபுல் டெலிவரி பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த ஹென்ரி நிகோல்ஸ் ஸ்ட்ரைட் ட்ரைவ் ஷாட்டாக அடித்தார். அவரின் ஷாட் சிறப்பாக இருந்தது. ஆனால் பந்து நேராக நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த டேர்லி மிட்செலை நோக்கி செல்ல, அவர் பதற்றத்தில் உடலை நகர்த்தினார். எனினும் பேட்டையும் நகர்த்த மறந்துவிட்டர் போல.

வினோதமான விக்கெட்

டேர்லி மிட்செல் கையில் வைத்திருந்த பேட்டில் பந்து பட்டு, மிட் ஆஃப் திசையில் இருந்த ஃபீல்டரிடம் சம்பந்தமே இன்றி கேட்ச் ஆக சென்றது. ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியாமல் ஹென்ரி நிகோல்ஸ் அவுட்டாகி களத்தை விட்டு வெளியே சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மீண்டு எழுந்த நியூசி,

மீண்டு எழுந்த நியூசி,

இங்கிலாந்து அணிக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த இந்த விக்கெட்டால், நியூசிலாந்து அணி 123 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் அதன் பின் ஜோடி சேர்ந்த டேர்லி மிட்செல் - டாம் ப்ளண்டெல் ஆகியோர் 100 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதன் மூலம் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 225 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து நல்ல நிலைமையில் உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
England vs New zealand: Henry Nicholls got dismissed in a bizarre manner - Video
Story first published: Friday, June 24, 2022, 11:26 [IST]
Other articles published on Jun 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X