For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி... போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஜோ டென்லீ

ஓல்ட் ட்ரபோர்ட் : இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் கடந்த 8ம் தேதி சௌதாம்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

Recommended Video

Ben Stokes sledged Blackwood in 1st test match

கடந்த 1988க்கு பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ளும் முனைப்புடன் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று துவங்கவுள்ள இந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், முதல் போட்டியில் தன்னுடைய மனைவியின் குழந்தை பேறு காரணமாக இடம்பெறாத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த போட்டியில் இணைகிறார். மேலும் அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டிரெயினிங்க்காக எல்லாம் காரை விக்கல... மெயின்டெயின் பண்ண முடியலப்பா... டூட்டி சந்த் விளக்கம் டிரெயினிங்க்காக எல்லாம் காரை விக்கல... மெயின்டெயின் பண்ண முடியலப்பா... டூட்டி சந்த் விளக்கம்

இன்று துவங்கும் 2வது போட்டி

இன்று துவங்கும் 2வது போட்டி

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8ம் தேதி இங்கிலாந்தின் சௌதாம்டனில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் துவங்கியது. சர்வதேச அளவில் எதிர்பார்ப்பிற்கு உள்ளான இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரம்

மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரம்

கடந்த 1988க்கு பிறகு இங்கிலாந்தில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரமாக உள்ளது. இன்று துவங்கும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்நிலையில், முதல் போட்டியில் தன்னுடைய மனைவியின் குழந்தை பேறு காரணமாக இடம்பெறாத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த போட்டியில் இடம்பெறுகிறார்.

டென்லீ, ஆன்டர்சன், மார்க் வுட் நீக்கம்

டென்லீ, ஆன்டர்சன், மார்க் வுட் நீக்கம்

இந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்நிலையில் ஜோ டென்லீ, ஜேம்ஸ் ஆன்டர்சன் மற்றும் மார்க் வுட் ஆகிய வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் 18 மற்றும் 29 ஆகிய சொற்ப ரன்களை எடுத்திருந்த ஜோ டென்லீ நீக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் ஜோ ரூட் இடம்பெறுகிறார்.

3வது இடத்தில் ஆட்டம்

3வது இடத்தில் ஆட்டம்

இந்நிலையில், கடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 76 ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் ஷாக் க்ரௌலி, 3வது இடத்தில் விளையாடுவார் என்றும் அணி சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஸ்டூவர் பிராட்டும் இடம்பிடித்துள்ளார். முதல் போட்டியில் இடம்பெறாதது ஏமாற்றமாக உள்ளதாக இவர் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 16, 2020, 14:29 [IST]
Other articles published on Jul 16, 2020
English summary
Root coming in at number four, Zak Crawley will move up to bat at three
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X