For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி 20 போட்டியையாவது வென்று ஆறுதல் தேடுமா அல்லது வெறுங்கையுடன் ஊர் திரும்புமா ஆஸி.?

By Aravinthan R

லண்டன்: இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளையும் வென்று ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஒரு போட்டியிலாவது வென்று ஆறுதல் தேடிக் கொள்ளலாம் என்ற ஆஸ்திரேலியாவின் எண்ணம் வீணானது.

இந்த ஒரு நாள் தொடரில், சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து முதல் நான்கு போட்டிகளையும் எளிதாக கைப்பற்றியிருந்தது. மூன்றாவது போட்டியில், இமாலய இலக்காக 481 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்தது.

மீதம் இருந்த கடைசி போட்டியிலும் வென்று தன் நீண்ட கால பகை அணியான ஆஸ்திரேலியாவுக்கு சுண்ணாம்பு (அதாம்பா.. ஒயிட்வாஷ்), அடிக்க காத்திருந்தது.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஐந்தாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில், ஆரோன் பின்ச் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா இறுதியில் 34.4 ஓவர்களில், 205 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ட்ராவிஸ் ஹெட் 56, அலெக்ஸ் காரி 44, டி'அர்சி ஷார்ட் 47 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

திணறிய இங்கிலாந்து

திணறிய இங்கிலாந்து

205 என்ற சிறிய இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த இங்கிலாந்தின் ஆட்டம் ஆஸ்திரேலியாவை விட மோசமாக இருந்தது. ஐம்பது ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்களை இழந்தது. அடுத்து 114 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து, தோல்வியை நோக்கி பயணித்தது. பத்தாவது பேட்ஸ்மனாக வந்த அதில் ரஷித், தன் விக்கெட்டைக் காப்பற்றி, ஜோஸ் பட்லருக்கு துணை நின்றார். அதிரடி ஆட்டக்காரரான பட்லர், நிலைமை உணர்ந்து பொறுப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி ஒன்பது ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் ரஷித் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கடைசி வரை நின்ற பட்லர் வெற்றிக்கான ரன்களை எடுத்து இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தார்.

இங்கிலாந்து ஏற்றம்

இங்கிலாந்து ஏற்றம்

ஆறுதல் வெற்றி பெறும் வாய்ப்பையும் தவறவிட்ட ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் போட்டிகளுக்கான ரேங்கிங் பட்டியலில் ஆறாம் இடம் பெற்றுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து, 126 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த தொடரில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து வீரர்கள் பலரும் தங்கள் ரேங்க்கை உயர்த்தி கொண்டுள்ளனர்.

டி20ல் ஆறுதல் பெறுமா

டி20ல் ஆறுதல் பெறுமா

ஒருநாள் ஆட்டங்களில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்க் பட்டியலில் ஜானி பேர்ஸ்டோ 11வது இடத்தையும், ஜோஸ் பட்லர் 16வது இடத்தையும், ஜேசன் ராய் 20வது இடத்தையும் பிடித்துள்ளனர். மொயின் அலி மற்றும் அதில் ரஷித் ஆகியோரும் தங்கள் பௌலர் ரேங்கிங்கை உயர்த்திக் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா, இந்த சுற்றுப்பயணத்தில் மீதமிருக்கும் ஒரு டி20யை ஆவது வென்று ஆறுதல் தேடுமா அல்லது, வெறுங்கையுடன் ஊர் திரும்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.



Story first published: Monday, June 25, 2018, 17:42 [IST]
Other articles published on Jun 25, 2018
English summary
England won all the five matches in the ODI series and left nothing to the visitors. Australia's worst performance continues.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X