For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

71 பந்துகள்.. 10 விக்கெட்டுகள்.. 45 ரன்கள்.. கெய்ல்னா யாரு? மே.இ. தீவுகளை சுருட்டிய இங்கிலாந்து

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் வென்ற நிலையில், ஒருநாள் தொடர் 2-2 என சமனானது. இதையடுத்து டி20 தொடர் நடந்துவருகிறது.

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டி20 போட்டி நடந்தது.

என்ன நினைச்சிட்டிருக்கு இந்தியா... ? ராணுவ தொப்பியோட எப்படி விளையாடலாம்.. வம்பிழுக்கும் பாக். என்ன நினைச்சிட்டிருக்கு இந்தியா... ? ராணுவ தொப்பியோட எப்படி விளையாடலாம்.. வம்பிழுக்கும் பாக்.

சொற்பம்

சொற்பம்

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். தொடக்க விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். மோர்கன், ஜோ டென்லி ஒற்றை இலக்கத்துடன் பெவிலியன் திரும்பினர்.

அரைசதமடித்த ரூட்

அரைசதமடித்த ரூட்

பின்னர் ஜோ ரூட்டுடன் கைகோர்த்த சாம் பில்லிங்ஸ் அபாரமாக ஆடினார். அரைசதம் அடித்த ரூட் 55 ரன்களில் வெளியேற, அதிரடியாக ஆடிய பில்லிங்ஸ், 47 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்தார். அவர் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இங்கி. 182 ரன்கள்

இங்கி. 182 ரன்கள்

இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 182 ரன்களை குவித்தது. 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சீட்டுக்கட்டுகள் போல சரிந்தனர்.

5 ரன்கள் எடுத்த கெய்ல்

5 ரன்கள் எடுத்த கெய்ல்

ஹெட்மயரும், பிராத்வெயிட்டும் இரட்டை இலக்கமான 10 ரன்களை எட்டினர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். சிக்சர் நாயகன் கெய்ல் எடுத்ததோ..... வெறும் 5 ரன்கள் தான்.

இங்கி. வெற்றி

இங்கி. வெற்றி

வெறும் 45 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமாக ஆட்டமிழந்ததது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2-0 என டி20 தொடரை வென்றது. ஆட்ட நாயகனாக சாம் பில்லிங்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து கைப்பற்றியது

இங்கிலாந்து கைப்பற்றியது

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்று டி20 தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது . 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இதே மைதானத்தில் திங்கள் அன்று நடைபெறுகிறது.

Story first published: Saturday, March 9, 2019, 17:32 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
England win T20 series after bowling out West Indies for 45.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X