For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஷ்வின் "நோ".. லோகேஷ் ராகுல் "யெஸ்".. சிராஜூக்கு அடித்த "யோகம்" - இந்திய அணி அறிவிப்பு

நாட்டிங்கம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது எனலாம். இங்கிலாந்தை அதன் மண்ணில் வைத்தே இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்தியாவுக்கு 4வது பதக்கம் உறுதி.. ஆடவர் மல்யுத்தம்..அரையிறுதியில் ரவிக்குமார் தியாஹி அசத்தல் வெற்றிஇந்தியாவுக்கு 4வது பதக்கம் உறுதி.. ஆடவர் மல்யுத்தம்..அரையிறுதியில் ரவிக்குமார் தியாஹி அசத்தல் வெற்றி

கடந்த 2014, 2018 ஆகிய தொடர்களில் இந்தியாவுக்கு கிடைத்த முடிவுகளை மறக்கடிக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் விராட் கோலியிடம் உள்ளது. இந்த நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

நாட்டிங்கமில் தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக பவுல் செய்த அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பயன்படுத்தினால் நல்லது

பயன்படுத்தினால் நல்லது

அதேசமயம், தொடக்க வீரராக இங்கிலாந்து அழைத்து வரப்பட்ட ஷுப்மன் கில் காயம் காரணமாக ஏற்கனவே நாடு திரும்பிவிட்ட நிலையில், மாயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருக்கு சமீபத்தில் பயிற்சியின் போது, சிராஜ் வீசிய பந்து தலையில் தாக்கியதால், அவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், எதிர்பார்த்தபடி லோகேஷ் ராகுலுக்கு ரோஹித்துடன் ஓப்பனிங் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது.

மீண்டும் புஜாரா

மீண்டும் புஜாரா

மற்றபடி புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு சிறிது காலம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் எக்ஸ்பெர்ட்ஸ் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், கோலி தன் ஆதரவை புஜாராவுக்கு மீண்டும் கொடுத்துள்ளார். இதை புஜாரா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

கோலி, ரஹானேவைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தபடி ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், இந்திய அணி மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், அவர் மிக விரைவாகவே அதிலிருந்து மீண்டு வந்து தற்போது அணியில் இடம் பிடித்துவிட்டார். கலக்குங்க ரிஷப்.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை, அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளார். அதேசமயம், ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலிங்கில் வரிசை கட்டுகின்றனர். அப்படியே இங்கிலாந்து பக்கம் வந்தோமெனில், அந்த அணியில் ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (w), சாம் கர்ரன், ஓலே ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Thursday, August 5, 2021, 12:25 [IST]
Other articles published on Aug 5, 2021
English summary
england won toss batting siraj, rahul included - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X