For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியாயமே இல்லை.. மொயின் அலிக்காக மொத்தமாக ஓடி வந்த இங்கிலாந்து வீரர்கள்.. பூதாகரமான ஐஎஸ்ஐஎஸ் சர்ச்சை

மும்பை: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் மொயின் அலியை சேர்த்து வைத்து பேசப்பட்ட சர்ச்சையில் இங்கிலாந்து வீரர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

மொயின் அலி குறித்து வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

அவங்களுக்கு நடந்தப்ப மட்டும் இனிச்சதோ?.. சிக்கலில் மாட்டிய கோலி.. சிஎஸ்கேவிற்கு நடந்த அதே சம்பவம்! அவங்களுக்கு நடந்தப்ப மட்டும் இனிச்சதோ?.. சிக்கலில் மாட்டிய கோலி.. சிஎஸ்கேவிற்கு நடந்த அதே சம்பவம்!

இந்நிலையில் மொயின் அலிக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்கள் பலர் தஸ்லிமா நஸ்ரீனை கடுமையாக தாக்கி வருகின்றனர்.

 சிஎஸ்கே

சிஎஸ்கே

இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி, இந்தாண்டு ஐ.பி.எல் 2021 தொடரில் சி.எஸ்.கே அணியில் விளையாட உள்ளார். சமீபத்தில் மொயின் அலி தனது ஜெர்சியில் இருக்கும் மதுபான நிறுவன விளம்பர படத்தை நீக்க சொன்னதாகவும், அதனை சிஎஸ்கே ஏற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் அது போன்று அவர் எந்த கோரிக்கையும் மொயின் அலி வைக்கவில்லை என்று சிஎஸ்கே தெரிவித்தது. இது ஐபிஎல் வட்டாரத்தில் பேசுப்பொருளானது.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

ஜெர்ஸி சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மொயின் அலி குறித்து வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துதான் அதற்கு காரணம். அதில் அவர் மொயின் அலி ஒருவேளை கிரிக்கெட் வீரராக ஆகாமல் இருந்திருந்தால் அவர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் என்று பதிவிட்டிருந்தார்.

தஸ்லிமா விளக்கம்

தஸ்லிமா விளக்கம்

தஸ்லிமாவின் இந்த கருத்து கிரிக்கெட் உலகமே அதிர்ந்தது. அவரின் இந்த கருத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர், தஸ்லிமா நஸ்ரீன் நீங்கள் நலமாக தான் உள்ளீர்களா? எனக்கு அப்படி ஒன்று தோனவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

வீரர்களின் பதிலடி

வீரர்களின் பதிலடி

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பவுலர் சகீப் மஹ்மூத், இது போன்ற அருவருப்பான கருத்துகளை ஏற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். அதே போல ஒருபடி மேலே சென்றுள்ள விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ், தஸ்லிமா நஸ்ரீனின் ட்விட்டர் கணக்கு குறித்து தொடர்ந்து புகார் செய்து, அதனை முடக்க வேண்டும் என ரசிகர்களிடம் கோரியுள்ளார்.

டக்கெட்

டக்கெட்

இதுகுறித்து கடும் வேடிக்கையான முறையில் பென் டக்கெட் பதிலடி கொடுத்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், யார் வேண்டுமானாலும் எந்த அருவருப்பான விஷயங்களை ட்வீட் செய்கின்றனர். ட்விட்டர் செயலியில் இதுதான் பெரிய பிரச்சினை. இவை மாற்றப்பட வேண்டும். அனைவரும் தஸ்லிமாவின் செயல் குறித்து புகார் அளியுங்கள் என தெரிவித்துள்ளார்.

விளக்கம்

இதனையடுத்து தனது ட்வீட்டுக்கு விளக்கமளித்த தஸ்லிமா, மொயின் அலி குறித்த எனது ட்வீட் ஒரு கிண்டலான ஒன்றுதான் என்பது என்னை வெறுப்பவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் முஸ்லீம் சமுதாயத்தை மதமயமாக்க முயற்சிக்கிறார்கள். நான் இஸ்லாமிய வெறித்தனத்தை எதிர்க்கிறேன். மனிதகுலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று, பெண்கள் சார்பு இடதுசாரிகள் பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பது என தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை

நடவடிக்கை

இந்த சர்ச்சை குறித்து மொயின் அலி இன்னும் வாய்த்திறக்காத நிலையில், அவரின் சார்பில் அவரது சட்டரீதியிலான செயல்களை பார்த்துக்கொள்ளும் Aces Middle East நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அந்த நிறுவனம், தஸ்லிமா நஸ்ரீம் மீது அவதூறு வழக்கு தொடர ஆலோசித்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் தஸ்லிமா மீது வழக்கு பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, April 8, 2021, 15:01 [IST]
Other articles published on Apr 8, 2021
English summary
English cricketers defending Moeen Ali for Taslima Nasreen's controversial comment
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X