For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன்சியில் தோனியை மிஞ்சிய கோலி..... 3வது டெஸ்டில் செய்த புதிய சாதனை...உற்சாகத்தில் ரசிகர்கள்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் சாதனையை கோலி தகர்த்துள்ளார்.

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அவர் அணியைவிட்டு போனதும்.. எல்லோரும் பரிதாபபட்டனர்.. கோலி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது? அவர் அணியைவிட்டு போனதும்.. எல்லோரும் பரிதாபபட்டனர்.. கோலி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது?

தோனியின் சாதனைகள் ஒவ்வொன்றாக தகர்த்து வரும் கோலி, இந்த வெற்றியின் மூலம் மேலும் ஒரு சாதனையை முறியடித்துள்ளார்.

3வது டெஸ்ட்

3வது டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ் முதலே இந்திய அணி பந்துவீச்சு படை ஆதிக்கம் செலுத்தியதால் இங்கிலாந்து அணி 2 இன்னிங்ஸ்களிலும் 112 & 81 ரன்களே அடித்தது. இதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி சாதனை முறியடிப்பு

தோனி சாதனை முறியடிப்பு

இந்த வெற்றியின் மூலம் இந்திய மண்ணில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். கோலி இதுவரை இந்திய மண்ணில் 29 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 22 வெற்றிகளை பெற்றுள்ளார். இவர் இந்திய மண்ணில் 30 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 21 வெற்றிகளை பெற்று தந்த தோனியின் சாதனையை முறியடித்தார்.

உள்நாட்டு சாதனை

உள்நாட்டு சாதனை

இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி 1000 ரன்கள் கடந்துள்ளார். 3வது டெஸ்டில் 12 ரன்கள் அடித்தால்1000 ரன்களை கடப்பார் என்று இருந்த நிலையில் கோலி 27 ரன்கள் அடித்தார்.

இது 9வது முறை

இது 9வது முறை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 9வது முறையாகும். இங்கிலாந்து அணியுடன் இதற்கு ஏற்கனவே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Friday, February 26, 2021, 10:55 [IST]
Other articles published on Feb 26, 2021
English summary
ENGvIND: Kohli Beats Dhoni's captaincy record of Highest win on home soil
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X