For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேகேஆர் அணிக்கு இயான் மார்கன் சிறப்பான தேர்வு... கோச் மெக்கல்லம் திட்டவட்டம்

அபுதாபி : ஐபிஎல் போட்டிகளுக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக தயாராகி வருகிறார். அணியின் அனைத்து தளங்களும் இந்த சீசனில் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய பௌலர் பாட் கமின்ஸ், அமெரிக்காவின் அலி கான் உள்ளிட்டவர்கள் அணியின் பௌலிங்கை சிறப்பாக வலிமைப்படுத்துவார்கள் என்று அணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோச் பிரென்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இதேபோல அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உலக கோப்பை வெற்றி நாயகன் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்த சிறப்பாக உதவுவார் என்றும் அவர் அணியின் மிகச்சிறந்த தேர்வு என்றும் மெக்கல்லம் மேலும் கூறியுள்ளார்.

தோனியை பார்த்து அவசரப்பட்டுவிட்டார்.. இனி வாய்ப்பே இல்லை.. சிஎஸ்கேவின் வெற்றி.. அதிர்ச்சியில் ரெய்னாதோனியை பார்த்து அவசரப்பட்டுவிட்டார்.. இனி வாய்ப்பே இல்லை.. சிஎஸ்கேவின் வெற்றி.. அதிர்ச்சியில் ரெய்னா

இந்த சீசனில் சிறப்பு

இந்த சீசனில் சிறப்பு

ஐபிஎல்லில் இந்த சீசனுக்காக மிகச்சிறப்பாக தயாராகியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த சீசனில் அணியில் பல சிறப்பான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அணியின் புதிய கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் பிரன்டன் மெக்கல்லம். இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள கேகேஆர், தற்போது இந்த சீசனிலும் கோப்பையை வெல்ல ஆவலுடன் காய் நகர்த்தி வருகிறது.

கமின்ஸ், அலி கான் சிறப்பு

கமின்ஸ், அலி கான் சிறப்பு

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அணியின் கோச் மெக்கல்லம், அணியின் பௌலிங் அட்டாக்கை வலிமை படுத்தும்வகையில் இணைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பௌலர் பாட் கமின்ஸ் மற்றும் அமெரிக்காவின் அலி கான் ஆகியோர் இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மார்கன் சிறப்பாக வலிமைப்படுத்துவார்

மார்கன் சிறப்பாக வலிமைப்படுத்துவார்

இதேபோல அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் வகையில் இணைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் உலக கோப்பை வெற்றி கேப்டன் இயான் மார்கன் சிறப்பான தேர்வு என்று அவர் கூறியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கிலாந்து அணியை அவர் சிறப்பாக வழிநடத்தி சென்றுள்ளதாகவும் புகழ்ந்துள்ளார். அவர் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் ஆடி வருவதாகவும் மெக்கல்லம் குறிப்பிட்டார்.

அணியின் இளம் பௌலர்கள்

அணியின் இளம் பௌலர்கள்

இந்த தொடர் முழுவதும் அணியின் சுப்மன் கில் டாப் ஆர்டரில் மட்டுமே விளையாடுவார் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார். மேலும் அணியின் இளம் பௌலர்கள் ஷிவம் மவி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியர் மற்றும் கம்லேஷ் நகர்கோட்டி ஆகியோர் இந்த சீசனில் ரசிகாகளை வெகுவாக உற்சாகம் மற்றும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குவார்கள் என்றும் மெக்கல்லம் நம்பிக்கை தெரிவித்தார்.

Story first published: Sunday, September 20, 2020, 18:03 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
KKR’s young pacers will surprise a lot of fans -McCullum
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X