For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய ரசிகர்களின் "ஆங்கில அறிவு".. நக்கலடித்த மெக்குல்லம், பட்லர் - அன்புக்கு தரும் மரியாதையா இது?

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பொழியும் அன்பை, லெஃப்டில் டீல் செய்திருக்கின்றனர் இந்த மூன்று வெளிநாட்டு வீரர்களும்.

இந்திய கிரிக்கெட்.. இன்று உலகின் டாப் கிரிக்கெட் நிர்வாகம். அடித்துக் கொள்ள ஆள் இல்லை. கை வைக்கும் பெரும்பாலான சப்ஜெக்ட்ஸ் சக்ஸஸ் தான்.

கோலி இல்ல.. ரோஹித் இல்ல.. இந்தியாவின் கோலி இல்ல.. ரோஹித் இல்ல.. இந்தியாவின்

அதன் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஐபிஎல். வருடா வருடம் நடக்கும் 4,000 - 5,000 கோடி பிஸ்னஸ் இது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், இந்த பிரீமியர் தொடரில் விளையாட தவம் இருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

டாப் முதல் லோ வரை

டாப் முதல் லோ வரை

உலகின் டாப் வீரர்கள் முதல் அறிமுக வீரர் வரும் அனைவரும் இதில் விளையாட அத்தனை ஆர்வம் காட்டுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று வருமானம். இரண்டாவது ஐபிஎல்லில் விளையாடும் வீரர் அறிமுக வீரராக இருப்பின், அவருக்கு அவருடைய தேசிய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மூன்றாவது, இழந்த ஃபார்மை மீட்பது.

புதிய சலசலப்பு

புதிய சலசலப்பு

இதனால், உலகின் அனைத்து நிலை வீரர்களும், எப்படியாவது ஐபிஎல்-ல் விளையாட வேண்டும் என்று துடிக்கின்றனர். இந்த நிலையில், இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையில் வெளிநாட்டு வீரர்களான பிரண்டன் மெக்குல்லம், ஜோஸ் பட்லர் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் கிண்டல் செய்து ட்வீட்டியுள்ள சம்பவம் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரண்டன் மெக்குல்லம்

பிரண்டன் மெக்குல்லம்

இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் பிரண்டன் மெக்குல்லம், 2018ம் ஆண்டு மே மதம் பதிவிட்ட ட்வீட் ஒன்றில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை டேக் செய்து, "josbuttler Sir, you play very good Opening batting" என்று பதிவிட்டுள்ளார். அதாவது, சரியாக ஆங்கிலம் தெரியாத சில இந்திய ரசிகர்கள் போன்று ஆங்கிலத்தில் மெக்குல்லம் ட்வீட் செய்திருந்தார்.

சர்ச்சையில் சீனியர்கள்

சர்ச்சையில் சீனியர்கள்

அதே டீவீட்டுக்கு பதில் அளித்துள்ள, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனும், இங்கிலாந்து லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் இயன் மோர்கன், "Sir you're my favourite batsman" என்று சில இந்திய ரசிகர்களின் ஆங்கில அறிவை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதேபோல், ஜோஸ் பட்லர் தனது டீவீட்டில், "Well done on double 100 much beauty batting your on fire sir." He further tweeted, "I always reply sir no.1 else like me like u" என்று இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து ட்வீட் செய்ய, அனைத்தும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தற்காலிக தடை

தற்காலிக தடை

குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக பவுலராக களமிறங்கி அசத்திய ஓலே ராபின்சன், இனவெறி மற்றும் பாலியல் தொடர்பான டிவீட்களை 8 வருடங்களுக்கு பதிவிட்டது இப்போது சர்ச்சை ஆனதால், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தற்காலிகமாக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தேவையா?

இது தேவையா?

இந்த சூழலில் தான் சில இந்திய ரசிகர்களின் ஆங்கில புலமையை நக்கல் செய்து, உலகின் தலை சிறந்த வீரர்களாக கருதப்படும் பிரண்டன் மெக்குல்லம், ஜோஸ் பட்லர், இயன் மோர்கன் ஆகியோர் ட்வீட் செய்திருக்கும் சம்பவம் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, June 7, 2021, 16:14 [IST]
Other articles published on Jun 7, 2021
English summary
Morgan, Buttler, Brendon mocking Indian English - ஜோஸ்பட்லர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X