For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை கண்டிஷனுக்கு சிஎஸ்கே மாறிடுவாங்க.. மும்பை இந்தியன்சை உதாரணம் காட்டி பிளமிங் சொல்லியிருக்காரு!

மும்பை : மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையிலான நேற்றைய போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் சிஎஸ்கேவை வெற்றி கொண்டுள்ளது

மும்பை வான்கடே மைதானத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் சிஎஸ்கே நேற்றைய போட்டியில் திணறலை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததற்கு அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

சிஎஸ்கே திணறல்

சிஎஸ்கே திணறல்

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது போட்டியிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது சிஎஸ்கே. ஆனால் நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடிய சிஎஸ்கேவால் பௌலிங்கில் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

கணிக்கப்பட்ட ரன்கள்

கணிக்கப்பட்ட ரன்கள்

நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை அடித்தது. வான்கடே மைதானம் சிறய மற்றும் பேட்டிங் பிட்சை கொண்டது. இந்நிலையில் அந்த மைதானத்தில் விளையாடும் முதல் அணி 200க்கு மேல் ரன்களை குவிப்பது அவசியம் என்று முன்னதாக கணிக்கப்பட்டிருந்தது.

ஜடேஜா, மொயீன் அலி திணறல்

ஜடேஜா, மொயீன் அலி திணறல்

ஆனால் 200 ரன்களை அடிக்க முடியாத நிலையில், சிஎஸ்கேவின் பௌலிங்கும் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் நிகிடி உள்ளிட்ட பௌலர்கள் குவாரன்டைனில் உள்ள நிலையில், மற்ற பௌலர்களும் சிறப்பான பந்துவீச்சை அளிக்கவில்லை. அணியின் ஜடேஜா மற்றும் மொயீன் அலி ஆகியோர் பௌலிங்கில் திணறினர்.

மாற்றிக் கொள்ள நேரம் பிடிக்கும்

மாற்றிக் கொள்ள நேரம் பிடிக்கும்

இந்நிலையில் அணியின் வீரர்கள் சென்னையின் கண்டிஷனுக்கு தகுந்தவாறே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹோம் அட்வான்டேஜ் இல்லாத நிலையில் மும்பை வான்கடே மைதானத்தின் கண்டிஷனுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள நேரம் பிடிக்கும் என்றும் அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

பிளமிங் உதாரணம்

பிளமிங் உதாரணம்

முன்தினம் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை கண்டீஷனுக்கு தக்க தங்களை மாறறிக் கொள்ள முடியாமல் தோல்வியுற்றதை சுட்டிக் காட்டிய பிளமிங், மும்பை கண்டிஷனுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள சிஎஸ்கேவிற்கு நேரம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த 4 போட்டிகளை சிஎஸ்கே மும்பையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 11, 2021, 20:07 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
Fleming also heaped rich praise on Suresh Raina after his quick fifty on IPL return
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X