For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு பிரஷர் ஜாஸ்தி…! எப்படி ஜெயிக்க போறாங்கனு தெரியலையே…! கவலையில் தமிழ் புலவர்

லண்டன்:உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் அழுத்தம் காத்திருக்கிறது என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

நாளை இந்திய அணி பயிற்சி போட்டியுடன் தமது உலக கோப்பை தொடரை தொடங்குகிறது. வெற்றி பெற வாழ்த்துகள் என்ற முழக்கங்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இருந்து எழுகிறது. இதற்காக தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல... அந்த போட்டியை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Every player in Indian team has a pressure says harbhajan singh

இந் நிலையில் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு அதிக அழுத்தம் இருப்பது உண்மை தான் என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய அணி கோப்பையை வெல்ல தகுதியான அணி.

கொலை வெறியுடன் இருக்கேன்..! உலக கோப்பை இந்த முறை எங்களுக்கு தான்...! யாருப்பா...? அது கொலை வெறியுடன் இருக்கேன்..! உலக கோப்பை இந்த முறை எங்களுக்கு தான்...! யாருப்பா...? அது

ஆனாலும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. அது இங்கிலாந்தின் சொந்த மைதானம் என்பதால், இங்கிலாந்து அணி பலமாக இருக்கும். மேலும் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

அந்த அணி வீரர்கள் சிறந்த பார்மில் இருக்கின்றனர். எனவே இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போட்டி முக்கியமான போட்டியாகும். தொடரில் இருக்கும் அதுமட்டுமின்றி அனைத்து அணிகளும் சிறப்பாக ஆடி வருவதால் உலக கோப்பை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

மேலும் இந்த தொடரில் கோலிக்கு மட்டும் அழுத்தம் இருக்கிறது என்பது உண்மை தான். அதே போல அணி வீரர்கள் அனைவருக்கும் அழுத்தம் இருக்கும். அதை எல்லாம் கடந்து அணிக்கு அனைவரும் வெற்றியை ஈட்டித் தருவார்கள் என்று கூறினார்.

Story first published: Friday, May 24, 2019, 14:53 [IST]
Other articles published on May 24, 2019
English summary
Every player in Indian team has a pressure says Harbhajan singh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X