“பேட்ஸ்மேன் மட்டும் நல்லவரா?”.. தீபக் சஹாரின் ரன் அவுட் எச்சரிக்கை.. பிராட் ஹாக் கடும் விளாசல்!

மும்பை: தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் தீபக் சஹார் மன்கட் முறையை பயன்படுத்தாதது குறித்து முன்னாள் வீரர் பிராட் ஹாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் கடந்த சில நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மன்கட் முறையிலான ரன் அவுட் தான்.

மன்கட் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த விக்கெட் முறையை இனி ரன் அவுட் என அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட் vs தீபக் சஹார்.. இந்திய ப்ளேயிங் 11 ஏற்பட்டுள்ள கடும் போட்டி.. காரணம் என்ன தெரியுமா?? ரிஷப் பண்ட் vs தீபக் சஹார்.. இந்திய ப்ளேயிங் 11 ஏற்பட்டுள்ள கடும் போட்டி.. காரணம் என்ன தெரியுமா??

மன்கட் சர்ச்சை

மன்கட் சர்ச்சை

சமீபத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, இங்கிலாந்து வீராங்கனையை இது போன்று ரன் அவுட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐசிசி விதிமுறைப்படி விக்கெட் எடுத்த போதும், இங்கிலாந்து ஊடகங்கள் தீப்தியை விமர்சித்திருந்தன. இதே போன்ற ஒரு சம்பவம் தான் இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் நடைபெற்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

16வது ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாகவே நான் ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த த்ரிஸ்டன் ஸ்டப்ஸ் க்ரீஸை விட்டு வெளியேறினார். அப்போது பவுலர் தீபக் சஹார், அவரை ரன் அவுட் செய்வது போன்று எச்சரிக்கை விடுத்தார். எனினும் ரன் அவுட் செய்யவில்லை. இதற்கு "ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்" என தீபக் சஹாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தன.

பிராட் ஹாக் அதிருப்தி

பிராட் ஹாக் அதிருப்தி

இந்நிலையில் இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள அவர், எச்சரிக்கையுடன் விட்டதால் நல்ல செயல் என தீபக் சஹார் பாராட்டப்படுகிறார். ஆனால் அந்த இடத்தில் பேட்ஸ்மேன் விதிமுறையை மீறி நடந்து கொண்டதற்காக யாருமே கண்டுக்கொள்ளவில்லையே ஏன்?

 சரமாரி கேள்விகள்

சரமாரி கேள்விகள்

அந்த இடத்தில் பேட்ஸ்மேன் விதிமுறையை மீறி விட்டார், ஆனால் பவுலர் விதி முறையை பயன்படுத்தாமல் போயுள்ளார். இதற்கு ஏன் யாரும் வாய்திறக்கவில்லை. தற்போதைய காலக்கட்டத்தில் அம்பயர்களின் தீர்ப்பையே ஏற்காமல் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்துகிறோம். அந்தவகையில் தீபக் சஹார் விஷயத்தில் பேட்ஸ்மேனை குறை கூறாதது எந்த வகையில் கிரிக்கெட்டின் நேர்மை தன்மை காப்பாற்றப்படுகிறது? என கேட்டுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ex Australia Star Brad Hogg raise a voice on Deepak chahar run out Issue in India vs south africa series
Story first published: Friday, October 7, 2022, 21:35 [IST]
Other articles published on Oct 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X