For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரின் ஆட்டமே வேற.. இப்பதான் இப்படி ஆயிட்டாரு விமர்சிக்கப்பட்ட சீனியர் வீரர், தோள்கொடுத்த தசகுப்தா

மும்பை: தற்போதைய போட்டிகளில் ரஹானேவின் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் தெரிகிறது என முன்னாள் வீரர் தீப் தசகுப்தா தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அவர் தான் இந்தியாவின் நம்பிக்கை.. அனைத்து போட்டியிலும் ஆட வேண்டும்.. இளம் வீரருக்காக லக்‌ஷ்மண் குரல்அவர் தான் இந்தியாவின் நம்பிக்கை.. அனைத்து போட்டியிலும் ஆட வேண்டும்.. இளம் வீரருக்காக லக்‌ஷ்மண் குரல்

இந்த தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சீனியர் வீரர்கள் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் பெரியளவில் ரன் குவிக்காதது பார்க்கப்படுகிறது.

விமர்சனம்

விமர்சனம்

குறிப்பாக ரஹானேவின் ஆட்டத்தில் பெரியளவில் மாற்றம் தெரிவதாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். பேட்டிங்கில் அவர் எந்தவித மன நம்பிக்கையும் இல்லாமல், பந்தை சந்திப்பதற்கு சற்று பதற்றப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனவும் கோரப்பட்டு வருகிறது.

பழைய ரஹானே எப்படி

பழைய ரஹானே எப்படி

இந்நிலையில் ரஹானே ஆட்டம் குறித்து தீப் தசகுப்தா ஏமாற்றமடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 2015 -16 காலக்கட்டத்தில் நான் பார்த்த ரஹானே தற்போது இல்லை. ரஹானே மும்பைக்காக உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவதை பார்த்துள்ளேன். வான்கடே மைதானத்தில் காலையில் ஈரப்பதமாக இருக்கும், புற்கள் அதிகளவில் இருக்கும். அங்கு ஆடுவது அப்போதெல்லாம் கடினமாக இருந்தது. ஆனால் ரஹானே அதில் 3வது வீரராக களமிறங்கி 4,000 - 4,500 ரன்களை விளாசியுள்ளார். அதுவும் சர்வதேச போட்டியில் ஆடுவதற்கு முன்பு.

ரஹானே ஃபூட் வொர்க்

ரஹானே ஃபூட் வொர்க்

இந்தியாவில் பேட்டிங் செய்யும் போது ஆட்டம் வேறு மாதிரி இருக்ககும். இதுவே வேறு நாடுகளுக்கு சென்றால் வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றுக்கு எதிராக ஆட வேண்டும். ஆனால் இங்கிலாந்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை சமாளிக்க வேண்டும். இதற்காக ரஹானேவின் ஃபூட் வொர்க் சிறப்பாக இருக்கும். 2015 -2016 ஆண்டுகளில் அவரின் ஃபூட் வொர்க்கை பார்த்தால் புரிந்துக்கொள்வீர்கள். முதல் 20 பந்துகளுக்கு மிகவும் கவனமாக இருப்பார். மேலும் மிகுந்த நம்பிக்கையுடன் ஆடுவார்.

இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நிச்சயம் ரஹானே பலம் வாய்ந்தவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, July 4, 2021, 18:30 [IST]
Other articles published on Jul 4, 2021
English summary
Former Indian Player Deep Dasagupta on why Rahane is not the same player as in 2015 - 2016
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X