For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நீங்கெல்லாம் ஃபாஸ்ட் பவுலரா” இந்திய வீரர் மீது பாக். சீனியர் விளாசல்.. நேரம் முடிந்ததாக எச்சரிக்கை

மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்விகளுடன் வெளியேறியது.

குறிப்பாக கே.எல்.ராகுல் தலைமையில் விளையாடிய ஒருநாள் கிரிக்கெட்டில் 3 - 0 என வைட் வாஷானது இந்திய அணி.

சீனியர் பவுலரின் சொதப்பல்

சீனியர் பவுலரின் சொதப்பல்

இந்த மோசமான தோல்விகளுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு மிக முக்கிய காரணம். ஜஸ்பிரித் பும்ரா தனது வழக்கமான பணியை செய்த போதும், மற்றொரு சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. இதனால் 3வது போட்டியில் வெளியேற்றப்பட்டார்.

முன்னாள் வீரர் எச்சரிக்கை

முன்னாள் வீரர் எச்சரிக்கை

இந்நிலையில் புவனேஷ்வர் குமாரின் முடிவு நெருங்கிவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புவனேஷ்வர் குமார் தனது வேகத்தை மீண்டும் கொண்டு வந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒரு வேகப்பந்துவீச்சாளர் 125 - 130 கிமீ வேகத்தில் தான் பந்துவீசுவார் என்றால் முகமது ஆஷிஃப் போன்று அவர் அதில் தனித்துவமான ஏதோ ஒரு விஷயத்தை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பிட்ச் சற்று ஸ்பின் ஆக வேண்டும். அப்போதுதான் விக்கெட் கிடைக்கும்.

அவமானமான விஷயம்

அவமானமான விஷயம்

தென்னாப்பிரிக்கா போன்ற களத்தில் விக்கெட் கீப்பர் தைரியமாக எழுந்து நின்று கேட்ச் பிடிக்கிறார். அங்கு வேகப்பந்துவீச்சாளர் என நீங்கள் என்ன செய்கிறீர்கள். பவுலர்களின் வேகத்தை பார்த்து பயந்துதான் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுவார்கள். வேகமே இல்லாமல் இருந்தால், பின்னர் பேட்ஸ்மேன் யோசனையே இல்லாமல் சிஸ்கர் மழை பொழிவார். இதனை புவனேஷ்வர் குமார் மாற்றியே ஆக வேண்டும். இல்லையென்றால் முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ மாறிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புவனேஷ்வருக்கு மீண்டும் வாய்ப்பு

புவனேஷ்வருக்கு மீண்டும் வாய்ப்பு

தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பிய புவனேஷ்வர் குமாருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் டி20 தொடரில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சீனியர் பவுலர்கள் அனைவரும் ஓய்வில் உள்ளதால் அவருக்கு கடைசி வாய்ப்பு தர இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

Story first published: Saturday, January 29, 2022, 10:23 [IST]
Other articles published on Jan 29, 2022
English summary
Ex-PAK Captain Salman butt gives a huge warning to Indian Star pacer Bhuvneshwar Kumar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X