பும்ராவை கார்களுடன் ஒப்பிட்ட பாக். சீனியர்.. தர்ம சங்கடத்தில் பிசிசிஐ.. அட இதுவும் சரிதானே.. விவரம்

இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவை கார்களுடன் ஒப்பிட்டு பிசிசிஐ மீது குறை கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியது தான் தற்போது பேசுப்பொருளாக உள்ளது.

டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?

பும்ரா இல்லை

பும்ரா இல்லை

காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த பும்ரா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களை புறகணித்துவிட்டு தற்போது தான் அணிக்கு திரும்பினார். ஆனால் தற்போதும் அவருக்கு காயத்தின் தன்மை குறையாததால் அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜடேஜா இல்லை, தற்போது பும்ராவும் இல்லை என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

சல்மான் பட் விளக்கம்

சல்மான் பட் விளக்கம்

இந்நிலையில் பும்ராவின் நிலைமைக்கு பிசிசிஐ தான் காரணம் என சல்மான் பட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பும்ராவுக்கு நிறைய பணிகளை கொடுக்கின்றனர். இந்தியாவுக்காக 3 வடிவ போட்டிகளிலும் ஆடுகிறார். மேலும் ஐபிஎல்-ல் தொடர்ச்சியான போட்டிகள் என பணிச்சுமையை அதிகமாக உள்ளது. ஆனால் அவர் ஒரு ப்ரீமியர் பவுலர் என நினைத்து சரியாக கையாண்டிருக்க வேண்டும்.

காருடன் ஒப்பீடு

காருடன் ஒப்பீடு

அதாவது ஜஸ்பிரித் பும்ரா ஒன்றும் 'டொயோட்டா கோரல்லா' போன்று தினந்தோறும் அனைத்து சாலைகளிலும் பயன்படுத்தும் கார் கிடையாது. அவர் லம்போர்கினி, ஃபெராரி போன்ற அதிவேக சூப்பர் கார் ஆகும். வார இறுதி நாட்களில் மட்டும் சரியாக பயன்படுத்தி வேகமாக செல்ல வேண்டும். டோயோட்டா கார்கள் போன்ற வீரர்கள் காயமானால் கூட பெரிதாக இருக்காது. ஆனால் பும்ரா இல்லையெனில் பெரும் நஷ்டம் இருக்கும் எனக்கூறியுள்ளார்.

பிசிசிஐ-ன் அவசரம்

பிசிசிஐ-ன் அவசரம்

காயத்தினால் இருந்த பும்ராவை பிசிசிஐ, டி20 உலகக்கோப்பைகாக அவசரப்படுத்தியதாக தெரிகிறது. இதன் விளைவாகவே ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரில் 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். இதனால் தான் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற நோக்கில் பிசிசிஐ பின் வாங்கியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
EX -PAK player Salman butt talked about the Bumrah's importance by comparing him with ferari Cars
Story first published: Friday, September 30, 2022, 15:20 [IST]
Other articles published on Sep 30, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X