For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அட இத யாருமே யோசிக்கலையே” கேப்டன்சி மாற்றத்தில் பிசிசிஐ போட்ட திட்டம்.. பாக். பிரபலம் நச் கருத்து!

மும்பை: இந்திய அணியில் நிலவும் கேப்டன்சி சர்ச்சைகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

விராட் கோலி பதவி விலக தயாராக இல்லை என்று கூறிய போதும், அவரின் பதவியை பறித்து ரோகித்திடம் ஒப்படைத்ததால் பிசிசிஐ மீது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த கோலிக்கு அதிக அழுத்தங்கள் இருந்ததால் தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் வரும் 2023ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை வழிநடத்தி கோப்பை வெல்வேன் என விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் ரோகித் சர்மாவிடம் முழு பொறுப்பையும் பிசிசிஐ ஒப்படைத்துள்ளது.

ஆச்சரியம் இல்லை

ஆச்சரியம் இல்லை

இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த முடிவு பெரிய ஆச்சரியப்படும் விஷயம் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கோலி விவகாரத்தில் இப்படி நடக்கும் என எனக்கு முன்பே தெரியும். வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் இடையே ஒரு கோடு இருக்க வேண்டியது அவசியம். அதனை தான் தற்போது செய்துள்ளனர். இதன் மூலம் விராட் கோலியின் அழுத்தங்கள் குறையும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இனி விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுவதை பார்க்கலாம். இந்திய அணி அதிகப்படியான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் விராட் கோலியின் மீது ரசிகர்களின் பார்வை திரும்புகிறது. அவர் அரைசதம் அடித்தால் கூட யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. ரன்களை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் வெற்றி தோல்வியையே பார்க்கின்றனர் என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ganguly on Rohit replacing Kohli as ODI skipper | OneIndia Tamil
துணைக்கேப்டன் பதவி

துணைக்கேப்டன் பதவி

விராட் கோலிக்கு துணைக் கேப்டன் பதவி கூட கொடுக்கப்படாது என தெரிகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கே.எல்.ராகுலை துணைக்கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. அவருக்கு இன்னும் வயது இருப்பதால் எதிர்காலத்தில் அவரையே கேப்டனாக நியமிக்க பயிற்சி பெறுவார் என நம்பப்படுகிறது.

Story first published: Thursday, December 9, 2021, 20:14 [IST]
Other articles published on Dec 9, 2021
English summary
Ex-Pakistan captain Salman butt 'not surprised' at the BCCI's Decision on Rohit replacing Kohli as ODI captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X