For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி சிறந்த விக்கெட் கீப்பரே கிடையாது.. பாக். முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து.. - அப்படி என்ன காரணம்?

மும்பை: தோனி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் கூறிய விமர்சனம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான வீரராக திகழ்ந்தவர் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி.

இந்திய அணிக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்றுக்கொடுத்த ஒரே கேப்டன் தோனி மட்டுமே ஆகும்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

 தோனியின் பெருமை

தோனியின் பெருமை

தோனியின் கேப்டன்சி திட்டங்கள் மற்றும் ஃபினிஷிங் அதிரடி ஆகியவை மிக பிரபலம். ஆனால் இவற்றையெல்லாம் விட, அவரின் விக்கெட் கீப்பிங்கிற்கு என்றே உலகின் பல்வேறு நாடுகளில் ரசிகர் பட்டாளம் உள்ளது. நொடி பொழுதில் ஸ்டம்பிங் செய்வது, டைவிங் கேட்ச் என விக்கெட் கீப்பிங்கில் அயல்நாட்டு வீரர்களுக்கு கூட முன்னுதாரணமாக விளங்குகிறார்.

பாக்.வீரர் விமர்சனம்

பாக்.வீரர் விமர்சனம்

இந்நிலையில் தோனி ஒன்றும் அவ்வளவு பெரிய விக்கெட் கீப்பர் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

தோனி என்பவர் சிறந்த வீரர். ஆனால் சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது. அவருடைய புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டால் 21% கேட்ச்களை அவர் தவறவிட்டுள்ளார். இது மிகப்பெரிய சொதப்பலாகும்.

காரணம் என்ன

காரணம் என்ன

அனைவரும் தோனி பிடித்த கேட்ச்களை தான் பார்க்கின்றனர். ஆனால் அவர் தவறவிட்ட, கேட்ச்கள், ஸ்டம்பிங்களை யாரும் கவனிக்கவில்லை. 2003க்கு பிறகு தான் விக்கெட் கீப்பிங் கணக்கீடு தொடங்கியது. அதில் பார்த்தால், ஆடம் கில்கிறிஸ்ட் 11% மட்டுமே தவறவிட்டுள்ளார். மார்க் பவுச்சரும் குறைந்த கேட்ச்களை தவறவிட்டுள்ளார்.

யார் தான் சிறந்தவர்

யார் தான் சிறந்தவர்

கடந்த 15 வருடங்களில் விக்கெட் கீப்பர்களின் ரெக்கார்ட்களை எடுத்து பார்த்தால் தென்னாப்பிரிக்காவின் குயிண்டன் டிக்காக் தான் சிறந்த விக்கெட் கீப்பர். அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். இதே போல டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் உள்ளார் என ரஷித் லதிஃப் கூறியுள்ளார்.

Recommended Video

Dhoni கொடுத்த Confidence! Deepak Chahar-ன் Motivational Speech | Cricket
தோனியின் ரெக்கார்ட்

தோனியின் ரெக்கார்ட்

தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்ச்கள் மற்றும் 38 ஸ்டம்பிங், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 321 கேட்ச்கள் மற்றும் 123 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 57 கேட்ச்கள் மற்றும் 34 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 12, 2022, 12:18 [IST]
Other articles published on Aug 12, 2022
English summary
Rashid latif about MS Dhoni wicket keeping skills ( தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து ரஷித் லதிஃப் கருத்து ) தோனி ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் கூறிய கருத்தால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X