For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுவிங் கம், இனிப்பு.. இதெல்லாம் சாப்பிடலாமா? கூடாதா?.. தெளிவா சொல்லுங்க.. டு ப்ளேசிஸ் கேள்வி!

எந்த செயல்கள் பந்து சேதப்படுத்தியதாக எடுத்துக்கொள்ளப்படும்? டு ப்ளேசிஸ் கேள்வி

By Aravinthan R

Recommended Video

சுவிங் கம், இனிப்பு..சாப்பிடலாமா...டு ப்ளேசிஸ் கேள்வி!- வீடியோ

துபாய்: பந்தை சேதப்படுத்தினால், இனி அதிக போட்டிகள் விளையாட தடை உள்ளிட்ட கடினமான தண்டனைகளை வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எந்தெந்த செயல்கள் எல்லாம் “பந்தை சேதப்படுத்துதல்” என்ற அர்த்ததில் எடுத்துக் கொள்ளப்படும்? என தென்னாபிரிக்கா கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் தொடங்கி வைத்த “பந்து சேதப்படுத்தும்” விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பலருடைய கருத்தின் அடிப்படையில், ஐசிசி இனி பந்தை சேதப்படுத்தினால், அதிக தண்டனை என அறிவித்து முடிக்க, இதோ அடுத்த சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார், டு ப்ளேசிஸ்.

எதெல்லாம் தப்புப்பா

எதெல்லாம் தப்புப்பா

அதிக தண்டனை என்ற செய்தியை வரவேற்றுள்ள டு ப்ளேசிஸ், அதே சமயம், எந்த செயல்கள் எல்லாம் பந்தை சேதப்படுத்த முயன்றதாக எடுத்துக் கொள்ளப்படும்? என்ற கேள்வியை முன் வைத்துள்ளார். அவர் எழுப்பும் சந்தேகங்கள் இதுதான்.

மின்ட் சாப்பிடலாமா

மின்ட் சாப்பிடலாமா

"ஐசிசி தன் விதிகளை கடுமையாக்கி உள்ளது. ஆனால், எந்த செயல்கள் செய்யலாம், எந்த செயல்கள் செய்யக்கூடாது என்பது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. சுவிங் கம் ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? மின்ட் சாப்பிடலாமா?

துப்பி பளபளபாக்கலாமா

துப்பி பளபளபாக்கலாமா

ஹஷிம் அம்லா, தான் நீண்ட நேரம் களத்தில் நிற்கும் போது இனிப்புகளை வாயில் வைத்துகொள்வார். இதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் வாயில் எதையாவது வைத்துகொண்டு, பந்தை எச்சில் வைத்து பளபளப்பாக்கினால் (Shining the ball), அதில் எந்த தவறும் இல்லை. இது எனது கருத்து" என்று கூறியுள்ளார்.

தினேஷ் சண்டிமால்

தினேஷ் சண்டிமால்

சமீபத்தில், இதே போல எச்சில் வைத்து துடைத்து பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி ஆட தடை பெற்றார், இலங்கையின் தினேஷ் சண்டிமால். அவரும், டு ப்ளேசிஸ் உடைய கருத்தை ஏற்று, இந்த பந்து சேதம் குறித்த விதிகளில் அதிக விளக்கம் தேவை என கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, இனிப்புகள் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் ஆடும்போது ரத்தத்தில் இனிப்பின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவும். அதனால், அதைப் பற்றிய விதிகளை தெளிவாக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

என்னடா இது ஐசிசிக்கு வந்த சோதனை? "பந்து சேதப்படுத்துதல் என்றால் என்ன?" அப்படின்னு ஒரு புக் எழுதி வெளியிட்டாதான் பிரச்சினை தீரும் போலவே!

Story first published: Sunday, July 8, 2018, 12:08 [IST]
Other articles published on Jul 8, 2018
English summary
Faf du Plessis asks for more clarity to the ball tampering rules, after ICC increased the penalty for it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X