தோனி வேற மாதிரி... பாகிஸ்தான் வீரருடன் ஒப்பிட முடியாது.. டூப்ளசிஸுன் நறுக் பதில்!

அபுதாபி: சிஎஸ்கே கேப்டன் தோனியை பாகிஸ்தான் அணி வீரருடன் ஒப்பீட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு டூப்ளசிஸ் நறுக்கென பதிலளித்துள்ளார்

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் கடந்த மே4ம் தேதி முதல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன்.. நான் ரெடி என பதில்! தமிழக வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன்.. நான் ரெடி என பதில்!

அயல்நாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு கிளம்பிச்சென்ற நிலையில் தற்போது வேறு தொடர்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

பிஎஸ்எல் தொடர்

பிஎஸ்எல் தொடர்

ஐபிஎல்-ஐ போன்றே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தற்போது மீண்டும் தொடங்கவுள்ளது. வரும் ஜூன்9ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஐபிஎல்-ல் பங்கேற்றிருந்த நட்சத்திர வீரர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஃபாப் டூப்ளசிஸ்

ஃபாப் டூப்ளசிஸ்

ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டூப்ளசிஸ் பிஎஸ்எல் தொடரில் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ஐபிஎல்-ல் இருந்த ஃபார்மை டூப்ளசிஸ் இந்த தொடரிலும் காட்டுவார் என நம்புவதாக கிளாடியேட்டர்ஸ் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமது தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்ஃபராஸும், விராட் கோலியும் ஒரே மாதிரியான குணம் கொண்டவர்கள் என டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.

தோனியிடம் ஒப்பீடு

தோனியிடம் ஒப்பீடு

பிஎஸ்எல் தொடர் எடுக்கப்பட்ட பேட்டியில், சிஎஸ்கே கேப்டன் தோனி மற்றும் சர்ஃபராஸ் அகமது கேப்டன்சி குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தோனி முற்றிலும் வேறுபட்டவர். அவர் மிகவும் அமைதியாக களத்தில் செயல்படுவார். ஆனால் சர்ஃபராஸ் அப்படி இல்லை. சஃபராஸ், விராட் கோலியை போன்றவர். எப்போதும் துடிப்பாக இருப்பார். வீரர்களிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருப்பார். இதில் சரியான கேப்டன்சரி, தவறான கேப்டன்சி என்று எதுவும் இல்லை

பொறுப்பு

பொறுப்பு

தொடர்ந்து சர்ஃபராஸ் குறித்து பேசிய அவர், சர்ஃபராஸ் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அது மிகச்சிறப்பானது. எனக்கு எப்போது பல நாட்டு அணி தலைவர்களுக்கு கீழ் விளையாடுவது பிடிக்கும். ஏனென்றால் நானும் கேப்டனாக செயல்படுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் எனக்கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Faf du Plessis finds Sarfaraz and Kohli's captaincy similar
Story first published: Saturday, June 5, 2021, 20:11 [IST]
Other articles published on Jun 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X