For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன்கள வச்சி சிஎஸ்கேவ வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருக்காரு

சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, அதிகமான கேப்டன்களை வைத்து அணியை வழிநடத்தி வருவதாகவும், அதுவே அணியின் வெற்றிக்கான ரகசியம் என்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Cricketers who never got the credit they deserved

ஐபிஎல்லின் கடந்த 12 சீசன்களில் 10 சீசன்களில் சிஎஸ்கே அணி இடம்பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு சீசனிலும் அந்த அணி அரையிறுதி வரையிலோ அல்லது பிளே-ஆப் சுற்று வரையிலோ வந்துவிடும். அந்த அளவிற்கு வெற்றிகரமான அணியாக அது உள்ளது.

இந்த வெற்றிக்கு காரணம், தோனி, அந்த அணிக்காக அதிகமான கேப்டன்களை தேர்வு செய்துள்ளதுதான் என்று பிளசிஸ் சிஎஸ்கே வெற்றி ரகசியம் கூறியுள்ளார்.

என் பையனை பார்த்தா மட்டமா இருக்கா? நியாயம் கேட்க பாக் சென்ற பதான் தந்தை.. அரண்டு போன பாக். ஜாம்பவான்என் பையனை பார்த்தா மட்டமா இருக்கா? நியாயம் கேட்க பாக் சென்ற பதான் தந்தை.. அரண்டு போன பாக். ஜாம்பவான்

வெற்றிகரமான அணி

வெற்றிகரமான அணி

ஐபிஎல்லின் கடந்த 12 சீசன்களின் 10 சீசன்களில் இடம்பெற்றுள்ள சிஎஸ்கே அணி, மிகவும் முக்கியமான அணியாக திகழ்ந்து வருகிறது. இந்த அணி இதுவரை தான் பங்கேற்ற ஐபிஎல் தொடர்களில் அரையிறுதி வரையோ அல்லது பிளே-ஆப் சுற்று வரையிலோ கண்டிப்பாக வந்துவிடும். இதற்கு தோனியின் வீரர்கள் தேர்வே மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது.

முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன்

முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன்

சிஎஸ்கே அணியின் வீரர்கள் தேர்வில் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீவன் பிளமிங் ஆகியோர் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், அணியில் மெக்கல்லம், பிராவோ மற்றும் தன்னை போன்ற கேப்டன்கள் இடம்பெற்றிருப்பதே அணியின் வெற்றிக்கு ரகசியம் என்றும், மேலும் தோனி, ரெய்னா போன்றவர்களும் அணியின் பலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரகசியத்தை உடைத்த பிளசிஸ்

ரகசியத்தை உடைத்த பிளசிஸ்

அணியில் பல நாட்டு அணிகளின் கேப்டன்கள் இடம்பெற்றுள்ளதால், அவர்கள், சக கிரிக்கெட் வீரர்களின் தேவைகள் குறித்து யோசிப்பார்கள் என்றும் இதுவே சிஎஸ்கே அணி தொடர்ந்து 3 முறை கோப்பையை கைப்பற்றியதற்கும் தொடர்ந்து இறுதிகட்டம் வரைக்கும் வந்ததற்கும் முக்கிய காரணம் என்றும் பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லுக்காக காத்திருக்கிறேன்

ஐபிஎல்லுக்காக காத்திருக்கிறேன்

இந்நிலையில், அணியில் பீல்டர்களும் மிகவும் பலம் பொருந்தியவர்களாக உள்ளதாகவும், தானும் பந்து அதிகமாக வரும் இடத்தை விரும்புவேன் என்றும் பிளசிஸ் கூறியுள்ளார். இதேபோல சர்வதேச அளவில் சிறப்பான ஆட்டத்தை அளித்துவரும் ரவீந்திர ஜடேஜாவும் அணியின் மிகச்சிறந்த பலம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, ஐபிஎல் தொடரை தான் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, April 20, 2020, 18:53 [IST]
Other articles published on Apr 20, 2020
English summary
Du Plessis said MS Dhoni's intelligent recruitment policy has helped him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X