For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லில் சிறப்பான தருணங்கள்... பிஎஸ்எல்லில் ஒருகை பார்த்துவிட துடிக்கும் பிளசிஸ்

கராச்சி : ஐபிஎல்லில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடி 4 அரைசதங்களை எடுத்துள்ளார் பாப் டூ பிளசிஸ்.

இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் சல்மி அணிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடரில் மீதமுள்ள 4 போட்டிகளில் அவர் அந்த அணியின் கீரன் பொல்லார்ட்டுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் நடத்தப்படும் தொடர்

மீண்டும் நடத்தப்படும் தொடர்

கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி துவங்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17ம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நவம்பர் 14, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் எஞ்சிய போட்டிகள் கராச்சியில் நடைபெறவுள்ளன.

கீரன் பொல்லார்ட்டுக்கு பதில் பிளசிஸ்

கீரன் பொல்லார்ட்டுக்கு பதில் பிளசிஸ்

தொடரின் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடிவந்த கீரன் பொல்லார்ட், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அந்த நேரத்தில் விளையாடவுள்ளதால், அவர் தற்போது பிஎஸ்எல்தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பதிலாக பாப் டூ பிளசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4 போட்டிகளே மீதம்

4 போட்டிகளே மீதம்

இதன்மூலம் முதல் முறையாக பாப் டூ பிளசிஸ் பிஎஸ்எல் தொடரில் இணைந்துள்ளார். தொடரில் இன்னும் 4 போட்டிகளே மீதமுள்ள நிலையில், தொடரில் இணையும் 21 வெளிநாட்டு வீரர்களில் டூ பிளசிசும் ஒருவர். டூ பிளசிஸ் இதுவரை தென்னாப்பிரிக்காகவிற்காக 47 டி20 போட்டிகள் உட்பட 255 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

4 அரைசதங்கள்

4 அரைசதங்கள்

ஐபிஎல்லிலும் சிஎஸ்கே சார்பில் இந்த சீசனில் போட்டியிட்ட அவர் 4 அரைசதங்களை அடித்துள்ளார். மேலும் 13 போட்டிகளில் விளையாடி 449 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 40.87. இதனிடையே, பிஎஸ்எல் தொடரில் இணைவது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, November 3, 2020, 20:52 [IST]
Other articles published on Nov 3, 2020
English summary
I am very excited to join Peshawar Zalmi for the playoff stage games of HBL PSL 2020 -Plesis
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X