ஒரு செல்ஃபிக்கு இவ்வளவு செலவா?.. விராட் கோலியையே மிரள வைத்த ரசிகர் .. கவுகாத்தியில் நடந்த சுவாரஸ்யம்

கவுகாத்தி: விராட் கோலியை பார்ப்பதற்காக ஒரு ரசிகர், தாராள பிரபுவாக செலவு செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் எந்த அளவிற்கு செல்வார்கள் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.

குறிப்பாக தோனி, விராட் கோலி போன்ற ஸ்டார் வீரர்களுக்கு இந்தியா முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.

விராட் கோலி படைத்த பிரமாண்ட சாதனை.. இதுவரை எந்த இந்தியருமே தொட்டது கூட இல்லை.. ரசிகர்கள் உற்சாகம்! விராட் கோலி படைத்த பிரமாண்ட சாதனை.. இதுவரை எந்த இந்தியருமே தொட்டது கூட இல்லை.. ரசிகர்கள் உற்சாகம்!

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

அப்படி ஒரு ரசிகர் செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. கவுகாத்தியை சேர்ந்தவர் ராகுல் ராய் என்பவர். விராட் கோலியின் தீவிர ரசிகரான இவர், பல ஆண்டுகளாக அவரை காண வேண்டும் என்பதற்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். அதற்கு சாதகமாக தான் இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 தொடர் அமைந்துள்ளது.

2வது டி20

2வது டி20

இரு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டி சமீபத்தில் கவுகாத்தியில் தான் நடைபெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் அசாமில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். மைதானங்களில் கோலியை பார்க்க முடியாமல் தவித்த ராகுல் ராய், இதுதான் சரியான வாய்ப்பு என கருதியுள்ளார். எனவே இந்திய வீரர்கள் தங்கிய அதே ஹோட்டலில் ஒரு இரவுக்கு ரூம் எடுத்துள்ளார்.

எவ்வளவு வாடகை?

எவ்வளவு வாடகை?

வழக்கமாகவே அதிக வாடகை கொண்ட அந்த ஹோட்டலில், இந்திய வீரர்களும் இருந்ததால் கூடுதல் விலையாகவே இருந்துள்ளது. அதாவது ஒரு இரவுக்காக சுமார் ரூ.23,000 செலவு செய்து ரூம் புக் செய்துள்ளார். அதன் பலனாக, கோலியையும் சந்தித்துள்ளார். காலை உணவுக்காக கோலி வந்த போது, அவரை அங்கேயே பார்த்து பேசியுள்ளார்.

உடனடியாக செல்ஃபி

உடனடியாக செல்ஃபி

ரசிகர் தனக்காக செய்த அனைத்து விஷயங்களையும் கேட்ட விராட் கோலி, அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு, செல்ஃபியும் எடுத்துக்கொள் எனக்கூறியுள்ளார். மேலும் அந்த ரசிகர் கொண்டு சென்ற புகைப்படத்திலும் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Fan Boy Spends around 23K to take a selfie with virat kohli during IND vs SA 3rd T20
Story first published: Tuesday, October 4, 2022, 13:53 [IST]
Other articles published on Oct 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X