ஐபிஎல் வீரர்களுக்கு அடித்த லக்.. தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட வாய்ப்பு.. யாருக்கு எல்லாம் இடம்?

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த அணி, உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.

இதனால், ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதில் இடம்பெற உள்ள ஐபிஎல் வீரர்கள் குறித்து முதலில் காணலாம்.

மகளிர் ஆசிய கோப்பை.. இந்திய அணிக்கு பிசிசிஐ திடீர் சுற்றரிக்கை.. காரணம் ரோகித் சர்மா படை தான்! மகளிர் ஆசிய கோப்பை.. இந்திய அணிக்கு பிசிசிஐ திடீர் சுற்றரிக்கை.. காரணம் ரோகித் சர்மா படை தான்!

ரஜத் பட்டிதார்

ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சதம் விளாசிய ரஜத் பட்டிதார், அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் கலக்கி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் டி20 உலககோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளதால், ரஜத் பட்டிதார் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்.

திலக் வர்மா

திலக் வர்மா

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய திலக் வர்மா, மீது ஏற்கனவே அதீத எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் திலக் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் திலக் வர்மாவை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சேர்க்க பிசிசிஐ வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாபாஸ் அகமது

ஷாபாஸ் அகமது

மற்றொரு ஆர்சிபி வீரரான ஷாபாஸ் அகமது, இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இடம்பெற வாய்ப்புள்ளது. அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் டி20 உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், ஷாபாஸ் அகமதுக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் உறுதி என்று கருதப்படுகிறது. இதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிரித்வி ஷா

பிரித்வி ஷா

இந்திய அணியிலிருந்து சமீப காலமாக ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷா, தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் மீண்டும் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பிரித்வி ஷா 48 பந்துகளில் 77 ரன்கள் விளாசி அசத்தினார். மேலும் சமீப காலமாக உள்ளூர் போட்டியிலும் பிரித்வி ஷா தனது திறமையை நிரூபித்து வருகிறார். இதனால் பிரித்வி ஷாவுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Fancy chances for IPL Players to be selected for Ind vs sa odi series 2022 ஐபிஎல் வீரர்களுக்கு அடித்த லக்.. தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட வாய்ப்பு.. யாருக்கு எல்லாம் இடம்?
Story first published: Tuesday, September 27, 2022, 16:38 [IST]
Other articles published on Sep 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X