For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லை கலக்கி.. சிக்சர்களாக வெளுக்கும் பேட்ஸ்மென்கள்... யார், யாரை முந்துவார்கள்? ஓர் அலசல்

மும்பை:ஐபிஎல் என்றாலே சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது என்பது ரசிகர்களின் தாரக மந்திரம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சீசனின் முதல் சிக்சரை யார் அடிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட அனைத்து ஆட்டத்திலும் பந்துகள் சிக்சர்களாக பறந்து கொண்டே இருக்க வேண்டும். அதுதான் பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும். அது போன்ற சிக்சர்களை அனைத்து வீரர்களும் அடிக்கலாம். ஆனால் ஒவ்வொரு அணியிலும் இருக்கும் பவர் ஹிட்டர்களின் சிக்சர்கள் மைதான எல்லையை கடந்து செல்லும்.

இந்திய முன்னாள் கேப்டன் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் ஏக பிரசித்தம். அதுபோல் இந்த சீசனில் பவர் ஷாட்களால் கலக்க காத்திருக்கும் வீரர்களை பார்ப்போம்.

ஐபிஎல் தொடரில் அதிக ஃபோர் அடித்த வீரர் யாருன்னு தெரியுமா? ரெய்னாவும் இல்லை.. கோலியும் இல்லை!! ஐபிஎல் தொடரில் அதிக ஃபோர் அடித்த வீரர் யாருன்னு தெரியுமா? ரெய்னாவும் இல்லை.. கோலியும் இல்லை!!

தல தோனி

தல தோனி

தோனியின் மனநிலை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதுதான். அமைதியான, ஆழமான சிந்தனையுடன் அணியை வழி நடத்திச் செல்வது... ஆலோசனை வழங்குவது.

சொல்லி அடிக்கும் தல

சொல்லி அடிக்கும் தல

எவ்வளவு பெரிய சேசிங்காக இருந்தாலும் ஆடி சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பார். அதுவும், ஐபிஎல் போட்டிகளில் கடைசி 4 ஓவர்களில் தோனி நின்றால் எதிரணியினர் பவுண்டரி எல்லையிலேயே போய் நின்றுவிடலாம் எனும் அளவுக்கு சிக்சர்களும், பவுண்டரிகளும் ஸ்கோர் போர்டில் ஏறும்.

மிஸ்டர் 360.. வில்லியர்ஸ்

மிஸ்டர் 360.. வில்லியர்ஸ்

கிரிக்கெட் உலகில் மிஸ்டர். 360 என்று அழைக்கப்படுபவர். மைதானத்தின் அனைத்து பகுதியிலும் சுத்தி சுத்தி அடித்து ஆடுவார். அதனால் தான் அவருக்கு இந்த பெயர்.

மிரளும் எதிரணி

மிரளும் எதிரணி

கிரிக்கெட்டில் 31 பந்துகளில் சதம் அடித்தவர். எந்த பந்தை எப்படி அடிக்க போகிறார், எங்கு போய்விழும் என்பதே எதிர் அணிக்கு தெரியாது. விக்கெட்டை வீழ்த்த பவுலர்கள் தனி பிளானேபோடுவார்கள்.

மீண்டு வந்தவர்

மீண்டு வந்தவர்

பெங்களூர் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவர். சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அட்டகாசப்படுத்தி பார்மில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ளார்.

பொல்லார்ட்

பொல்லார்ட்

ஐபிஎல் சீசன் ஆரம்பித்தது முதலே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் அனுபவம் வாய்ந்த வீரர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடி... அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றவர். மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்.

நொறுக்கி தள்ளும் ஹிட்டர்

நொறுக்கி தள்ளும் ஹிட்டர்

அவர் அடிக்கும் சிக்சர்கள் மைதானத்திற்கு வெளியில் மட்டுமே செல்லும் அளவுக்கு பவர் ஹிட்டர். மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களுக்கு மட்டுமே இருக்கும் ஆர்ம் பவர்.. கொஞ்சம் அதிகமாக உள்ள வீரர்.

பட்லர்

பட்லர்

மும்பை அணிக்கு கிடைத்து பின்னர் ராஜஸ்தான் அணிக்கு கொண்டு போகப் பட்டவர். கடந்த சீசனில் தொடக்க வீரராக களமிறங்கி அற்புத ஷாட்களால் ராஜஸ்தானை அரையிறுதி வரை கொண்டு சென்றவர். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், 77 பந்துகளுக்கு 150 ரன்கள் குவித்தவர்.

டெல்லியின் மோரிஸ்

டெல்லியின் மோரிஸ்

2 சீசன்களில் தூணாக நின்று டெல்லி அணிக்கு பல வெற்றிகளை கொண்டு வந்தவர். டாப் ஆர்டர் சரிந்தால் டெல்லிக்கு இருக்கும் ஒரே மாற்று மோரிஸ். குஜராத் அணிக்கு எதிராக 9 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தவர்.

 காத்திருக்கும் வான வேடிக்கை

காத்திருக்கும் வான வேடிக்கை

ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. இவர்களின் அதிரடி ஆட்டமும் வான வேடிக்கைகளாக மைதானத்தை சிதறடிக்கத் தான் போகிறது. ரசிகர்களும் பார்க்க தான் போகிறார்கள்.

Story first published: Friday, March 22, 2019, 17:23 [IST]
Other articles published on Mar 22, 2019
English summary
Fans are waiting to watch their favourite sport star who will make record in ipl.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X