அப்படி போடு..!! கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஒரு குத்துச்சண்டை.. இங்கி, ரசிகர்களால் அதிர்ந்த மைதானம்

ஹெட்டிங்லி: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது திடீரென குத்துச்சண்டை நடைபெற்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அப்படி போடு..!! கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஒரு குத்துச்சண்டை.. இங்கி, ரசிகர்களால் அதிர்ந்த மைதானம்

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணி 3 - 0 என நியூசிலாந்து அணியை வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.

ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி முழுக்க முழுக்க அதிரடி நிறைந்த ஒன்றாக அமைந்திருந்தது. ஜானி பேர்ஸ்டோ 157 பந்துகளில் 162 ரன்கள், 2வது இன்னின்ஸில் 30 பந்துகளில் அரைசதம் என அதிரடிகள் பேட்டிங்கை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங் அதிரடியை போன்று குத்துச்சண்டை அதிரடியும் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து மக்கள் எப்போதுமே எந்தவித சத்தமும் இன்றி போட்டியை காண்பார்கள். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் இருவர் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அதுவும் குத்துச்சண்டை வீரர்கள் போன்று முகத்திலேயே மாறி மாறி அடித்துக்கொண்டனர்.

எல்லை மீறி சென்ற இந்த சண்டையால் இருக்கைகள் அனைத்தும் உடைந்து விழுந்தன. இதனால் மைதானம் முழுவதும் பரபரப்பு ஏற்பட, உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள், அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதன்பின்னர் போட்டி தொடங்கியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Fans fight in England vs Newzealand test ( இங்கிலாந்து vs நியூசிலாந்து டெஸ்ட் ) இங்கிலாந்து vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்கள் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Story first published: Tuesday, June 28, 2022, 17:11 [IST]
Other articles published on Jun 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X