For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டு.. ஆனால் ஈரப்பதத்தால் ஆட்டத்தை கைவிடும் நிலை.. விரக்தியில் ரசிகர்கள்

நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

இதன்மூலம் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

இந்தியா vs ஆஸி 2வது டி20 போட்டி.. 5 ஓவர்கள் ஆட்டமாக நடைபெறுமா? பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்! இந்தியா vs ஆஸி 2வது டி20 போட்டி.. 5 ஓவர்கள் ஆட்டமாக நடைபெறுமா? பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்!

டாஸ் தாமதம்

டாஸ் தாமதம்

அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருப்பதற்கான முனைப்பில் களமிறங்குகிறது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு அணிக்கும் இடையிலான போட்டி மைதானத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவர்கள் ஆய்வு

நடுவர்கள் ஆய்வு

7 மணிக்கு கள நடுவர்களுடன் இணைந்து ஆட்ட நடுவர் மைதானத்தில் இருந்த அவுட்ஃபீல்டில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போதும் ஈரப்பதம் குறையாததால், 8 மணிக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மைதானத்தில் சில பகுதிகளில் ஈரப்பதம் குறையாமல் இருப்பதால், 8.45 மணிக்கு மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஈரப்பதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், வீரர்களுக்கு காயம் ஏற்படும் என்பதால், நடுவர்கள் மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரசிகர்கள் விரக்தி

ரசிகர்கள் விரக்தி

மழை பெய்யாமல் மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதன் காரணமாக போட்டியை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நாக்பூரில் மழை பெய்தாலும், இன்று மழை பெய்யவில்லை. இருந்தும் மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

பிசிசிஐ தவறா?

பிசிசிஐ தவறா?

உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டி, மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. நாள் முழுவதும் மழை பெய்யாத போதும், மைதான அதிகாரிகளால் ஏன் போட்டியை நடத்தும் அளவிற்கு தயார் செய்யவில்லை என்றும், குறைந்தபட்சம் மைதானத்தில் தார்பாய் கொண்டு மூடி வைக்க கூட முடியாத அளவில் வாரியம் இருக்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Friday, September 23, 2022, 20:51 [IST]
Other articles published on Sep 23, 2022
English summary
Fans Questioning No rain all day in Nagpur. yet the match has witnessed a considerable delay due to wet outfield. Why can't stadium authorities be better prepared? Can least afford to cover the entire ground.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X