சினிமா ஸ்டார்களை மிஞ்சிய விராட் கோலி.. ரசிகர்கள் செய்த சிறப்பான ஏற்பாடு.. சேட்டன்களின் சேட்டைகள்

திருவனந்தபுரம் : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நாளை புதன்கிழமை திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Recommended Video

இந்திய வீரர் Virat Kohli-க்கு பிரமாண்ட வரவேற்பு! குவிந்த ரசிகர்கள்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நேற்று திருவனந்தபுரம் வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் முதல் டி20 போட்டிக்கு சினிமா நட்சத்திரங்களையும் மிஞ்சும் அளவுக்கு கேரள ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகளுக்கு திட்டமிட்டுள்ளனர்.

IND vs SA தொடரில் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு இல்லை..உடல் தகுதியுடன் இருந்தும் முடிவு..காரணம் என்ன?IND vs SA தொடரில் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு இல்லை..உடல் தகுதியுடன் இருந்தும் முடிவு..காரணம் என்ன?

கடைசி போட்டி

கடைசி போட்டி

திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் தான் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இங்கு கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதின. இதில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

கோலிக்கு கட்அவுட்

கோலிக்கு கட்அவுட்

விராட் கோலிக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி கேரளா வந்துள்ளதால் இம்முறை பல ஸ்பெஷல் ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். குறிப்பாக சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும்தான் கட் அவுட் வைக்கப்படும். இந்த நிலையில் போட்டி நடைபெறும் கிரீன் பீல்ட் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கட்டவுட் வைத்துள்ளனர்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

மேலும் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தங்கி உள்ள ஹோட்டல் முன் கூடி உள்ள கேரள ரசிகர்கள் பதாகைகள் ஏந்தி அவரை வரவேற்றுள்ளனர். எனினும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்திய அளவில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் மிஸ் யூ சஞ்சு சாம்சன் என்ற பதாகைகளை கேரள ரசிகர்கள் தயாரித்து வருகின்றனர்.

ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு

ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு கடைசியாக பங்கேற்கும் சர்வதேச தொடர் இதுதான் என்பதால் இந்த போட்டிகள் பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. இந்திய அணி தற்போது தான் பிளேயிங் லெவன் குறித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அணியில் இடம் பெறாதது ரிஷப் பண்ட்க்கு கதவை திறந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Fans gives spectacular welcome for indian fans for 1st t20 vs saசினிமா ஸ்டார்களை மிஞ்சிய விராட் கோலி.. ரசிகர்கள் செய்த சிறப்பான ஏற்பாடு.. சேட்டன்களின் சேட்டைகள்
Story first published: Tuesday, September 27, 2022, 16:39 [IST]
Other articles published on Sep 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X