For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோர்கன் vs தோனி.. கேப்டன்களின் மோசமான பார்ம்.. முடிவுக்கு வருமா.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

துபாய்: ஐ.பி.எல் 2021 சீசன் இறுதிப்போட்டி இன்று இரவு வெற்றிகரமாக நடைபெற உள்ளது. பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் பரிதாபமாக வெளியேற தோனி படை இந்த சீசனில் வெறி கொண்டு பைனலுக்கு வந்து விட்டது.

இந்த சீசனில் கொல்கத்தா எழுச்சியும் அசாதாரணமானது. இந்தியாவில் நடந்த முதல் பாதி போட்டியில் 7 போட்டியில் விளையாடி கொல்கத்தா 5-ல் தோற்று இருந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீகரக போட்டியில் 7-ல் 5-ல் வெற்றி பெற்றது.

 மொத்தமாக ஒரு லோடு மண்ணை அள்ளி DC மீது போட்ட தோனி - 9வது முறை ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே மொத்தமாக ஒரு லோடு மண்ணை அள்ளி DC மீது போட்ட தோனி - 9வது முறை ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே

சென்னை-கொல்கத்தா

சென்னை-கொல்கத்தா

சென்னையில் ருத்ராஜ், டூ பிளிசிஸ் ஒப்பனர்களாக கலக்க கொல்கத்தாவில் வெங்கடேஷ், கில் கலக்கி போட்டு வருகிறார்கள். கொல்கத்தாவில் பெர்குசன், மாவி பாஸ்ட் பவுலிங்கில் அசுரத்தமனாக போட, இவர்களுக்கு போட்டியளிக்கும் விதமாக ஹஸல்வுட், தீபக் சாகர், ஷரத்துல் தாகூர், பிராவோ உள்ளனர். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை கொல்கத்தா அசுர பலத்துடன் நிற்கிறது.

கேப்டன்களின் பார்ம்

கேப்டன்களின் பார்ம்

தமிழக வீரர் வருண் கார்த்தி, சுனில் நரைன், ஹாகிப் அல் ஹசன் ஆகியோர் எதிரணியை தொடர்ந்து மிரட்டி கொண்டிருக்கின்றனர். சென்னையில் ஜடேஜா, மொயீன் அலி உள்ளனர். இவ்வாறு இரண்டு சைடிலும் சம பலம் இருக்க, இரு அணி கேப்டன்களின் பார்ம்தான் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதாவது சென்னை கேப்டன் தோனி இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடி வெறும் 114 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

ஸ்பினர்களை சமாளிப்பாரா ?

ஸ்பினர்களை சமாளிப்பாரா ?

ஆனால் கடைசி மேட்சில் 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவர் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. தோனியின் பேட்டிங் பழைய பார்முக்கு திரும்பி விட்டதாக தெரிவித்து வருகின்றனர். பாஸ்ட் பவுலிங்கை சிறப்பாக ஆடினாலும், ஸ்பின் பவுலிங்கில் மோசமாக அவுட்டாவது தோனிக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இன்றைய மேட்சில் அவர் ஸ்பினர்களை சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோர்கனின் மோசமான பேட்டிங்

மோர்கனின் மோசமான பேட்டிங்

கொல்கத்தா கேப்டன் மோர்கனின் பேட்டிங் தோனியின் பேட்டிங்கை விட மிக மோசமாக உள்ளது. இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 124 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மோர்கனின் பார்ம் மோசமாக உள்ளது அந்த அணிக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் கடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் அவுட்டானது ஏற்றுக்கொள்ள முடியாதது. தோனி, மோர்கன் பழைய பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே இரு அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Friday, October 15, 2021, 12:25 [IST]
Other articles published on Oct 15, 2021
English summary
Fans in Chennai and Kolkata are expecting Dhoni and Morgan to return to their old form. Kolkata captain Morgan's batting is far worse than Dhoni's. He has played in 14 matches this season and scored only 124 runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X