போஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் வரும் சனிக்கிழமை இந்தியா -நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதையடுத்து இரு அணி வீரர்களும் கிறிஸ்ட்சர்ச்சிற்கு பயணமாகி வருகின்றனர்.

கிறிஸ்ட்சர்ச்சிற்கு தாங்கள் பயணம் மேற்கொண்டதன் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் இஷாந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் பதிவிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அவர்களை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

போஸ் கொடுப்பதை விட்டுவிட்டு நல்லா விளையாடுங்க என்று ஒரு ரசிகரும், ஆங்காங்கே சுற்றிக் கொண்டு இருக்காமல், நன்கு பயிற்சி மேற்கொண்டு விளையாடுங்கள் என்று மற்றொரு ரசிகரும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டனில் நடந்து முடிந்துள்ள முதல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டுள்ளது. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு இந்திய அணி உள்ளாகியுள்ள நிலையில், தற்போது வரும் சனிக்கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.

விராட் கோலி காட்டம்

விராட் கோலி காட்டம்

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணி, ஒரு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட குவிக்காமல் 165 மற்றும் 191 ரன்களில் சுருண்டது. உலகதரத்திலான டெஸ்ட் அணியாக உள்ள இந்திய அணியின் இந்த விளையாட்டு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஒரு போட்டியில் தோற்றால் உலகமே முடிந்துவிட்டதாகாது என்று விராட் கோலி காட்டம் தெரிவித்திருந்தார்.

கிறிஸ்ட்சர்ச்சில் போட்டி

கிறிஸ்ட்சர்ச்சில் போட்டி

வரும் 29ம் தேதி சனிக்கிழமை இந்தியா -நியூசிலாந்து இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ள நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள், போட்டி நடைபெறும் கிறிஸ்ட்சர்ச்சிற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விராட் கோலி, மயங்க் அகர்வால், இஷாந்த் சர்மா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் கிறிஸ்ட்சர்ச்சிற்கு பயணம் மேற்கொண்டனர்.

வறுத்தெடுத்த ரசிகர்கள்

வறுத்தெடுத்த ரசிகர்கள்

இந்த பயணம் குறித்த புகைப்படத்தை இஷாந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இதையடுத்து கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாத இந்தியா அணி, இத்தகைய போஸ் கொடுத்தது குறித்து கோபமடைந்த ரசிகர்கள் அவர்களை சமூகவலைதளத்தில் பல்வேறு கேள்விகளால் திணறடித்தனர்.

விளையாட ஆரம்பிங்க

விளையாட ஆரம்பிங்க

விராட் கோலி, மயங்க் அகர்வால், இஷாந்த் சர்மா மற்றும் ரிஷப் பந்த்தின் இந்த புகைப்படத்திற்கு பதிலளித்த ரசிகர்கள், போஸ் கொடுக்கறத விட்டுவிட்டு விளையாட ஆரம்பியுங்கள் என்று டிவீட் செய்துள்ளார். இதேபோல ஊரை சுற்றிக்கொண்டிருக்காமல் நன்கு பயிற்சியெடுத்து சிறப்பாக விளையாடுமாறும் மற்றொரு ரசிகர் டிவீட்டியிருந்தார்.

அபாரமாக விளையாடிய இஷாந்த், மயங்க்

அபாரமாக விளையாடிய இஷாந்த், மயங்க்

நியூசிலாந்திற்கு எதிரான கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மயங்க் அகர்வால் 92 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில், அவர்களுக்கு எதிராகவே ரசிகர்கள் இத்தகைய கமெண்ட்டுகளை போஸ்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Ishant Sharma, Mayank Agarwal Trolled For Posting Travel Picture
Story first published: Wednesday, February 26, 2020, 12:54 [IST]
Other articles published on Feb 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X