For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது நினைவு இருக்கா?..கிரிக்கெட் வீரர்களுக்கு பதான் நெத்தியடி பதில்.. தில்!

சென்னை: மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலர் விவசாய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் கருத்தை விமர்சிக்கும் வகையில் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி விவசாய போராட்டம் தற்போது டிவிட்டரில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டா தன்பெர்க், ரிஹான்னா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் இது குறித்து குரல் கொடுத்ததுதான் இந்த விவாதங்கள் அனைத்திற்கும் காரணம்.

வெளிநாட்டு பிரபலங்கள் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியதை மத்திய அரசு விரும்பவில்லை. இது எல்லாம் திட்டமிட்ட பிரச்சாரம் என்று கூறி மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அறிக்கை

அறிக்கை

இந்த வெளியுறவுத்துறை அறிக்கையை தொடர்ந்து வரிசையாக திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் இது தொடர்பாக டிவிட் செய்தனர். இந்திய விவகாரத்தில் வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க கூடாது. இந்திய பிரச்சனை குறித்து பேசும் உரிமை வெளிநாட்டு மக்களுக்கு கிடையாது என்று வரிசையாக கருத்து தெரிவித்தனர்.

யார்

யார்

சச்சின், கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் எல்லாம் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இது எங்கள் நாட்டு விவகாரம், நீங்கள் இதில் வேடிக்கை பார்க்கலாம். கருத்து சொல்ல முடியாது என்று டிவிட் செய்து அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

ஆதரவு

ஆதரவு

இந்த நிலையில் மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலர் விவசாய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் கருத்தை விமர்சிக்கும் வகையில் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பதான் செய்துள்ள டிவிட்டில், அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு போலீசார் மூலம் கொடூரமாக கொல்லப்பட்டார்.

கொலை

அப்போது அந்த கொலைக்காக நாம் முறையாக வருத்தம் தெரிவித்தோம், என்று பதான் குறிப்பிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சனையில் நாம் கருத்து கூறினோம் என்பதை மறக்க வேண்டாம் என்று பதான் குத்திக் காட்டும் விதமாக டிவிட் செய்துள்ளார்.

கிரிக்கெட்

கிரிக்கெட்

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட போது இந்திய பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இதை சுட்டிக்காட்டி பதான் கிண்டல் செய்துள்ளார். இவரின் டிவிட்டிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Thursday, February 4, 2021, 21:27 [IST]
Other articles published on Feb 4, 2021
English summary
Farmers Protests: Irfan Pathan tweets India rightly expressed our grief for Geroge Floyd.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X