For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பையில் அனுஷ்கா சர்மாவுக்கு டீ எடுத்து வருவது தான் தேர்வுக் குழு வேலை.. அதிர வைக்கும் தகவல்!

மும்பை : முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் இந்திய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்களை சரமாரியாக விளாசி இருக்கிறார்.

தேர்வுக் குழுவினரை இதற்கு முன்பும் கவாஸ்கர் போன்ற பலரும் விமர்சித்து வந்துள்ளனர். ஆனால், கங்குலியின் வரவுக்குப் பின் மிகவும் வெளிப்படையாக, இதுவரை யாரும் சொல்லாத தகவல்களை கூறி விளாசி இருக்கிறார் பரூக் இன்ஜினியர்.

அப்போது அவர் கூறிய தகவல் ஒன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

டீ எடுத்து வந்தனர்

டீ எடுத்து வந்தனர்

சில மாதங்கள் முன்பு நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது தேர்வுக் குழு கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு டீ எடுத்து வந்த வேலையை மட்டுமே செய்தார்கள் என கூறி கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளார்.

தேர்வுக் குழு விமர்சனம்

தேர்வுக் குழு விமர்சனம்

இந்திய அணியின் தற்போதைய தேர்வுக் குழு தான் இதுவரை இருந்த தேர்வுக் குழுக்களிலேயே மிக மோசமான விமர்சனத்தை சந்தித்து வரும் குழு. இந்த குழுவின் தலைவர் எம்எஸ்கே பிரசாத் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு தெரிந்த தகவலாக உள்ளது.

குறைந்த அனுபவம்

குறைந்த அனுபவம்

தேர்வுக் குழுவின் மற்ற நான்கு உறுப்பினர்கள் யார் என்பதே பலருக்கும் தெரியவில்லை. அதற்கு காரணம், இந்த தேர்வுக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மிக மிக குறைந்த சர்வதேச போட்டிகளில் ஆடி உள்ளனர்.

எத்தனை போட்டிகள்?

எத்தனை போட்டிகள்?

தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் 6 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளார். மற்ற உறுப்பினர்களில் தேவாங் காந்தி - 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, சரண்தீப் சிங் - 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஜதின் பரஞ்ச்பே - 4 ஒருநாள் போட்டி, காகன் கோடா - 2 ஒருநாள் போட்டி ஆடியுள்ளனர்.

கோலி - ரவி சாஸ்திரி முடிவு

கோலி - ரவி சாஸ்திரி முடிவு

இந்த அனுபவம் குறைந்த தேர்வுக் குழு கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொல்படி இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதாக பரவலாக புகார் உள்ளது. இந்த நிலையில், தான் தேர்வுக் குழுவை விளாசி இருக்கிறார் பரூக் இன்ஜினியர்.

மிக்கி மவுஸ் குழு

மிக்கி மவுஸ் குழு

பரூக் இன்ஜினியர் கூறியது - நமக்கு ஒரு மிக்கி மவுஸ் தேர்வுக் குழு கிடைத்துள்ளது. தேர்வுக் குழுவின் நடைமுறையில் விராட் கோலி அதிக ஆதிக்கம் செலுத்துகிறார். அது நல்ல விஷயம் தான்.

அனுபவம் என்ன?

அனுபவம் என்ன?

ஆனால், இந்த தேர்வுக் குழு எந்த வகையில் தகுதி பெறுகிறார்கள்? அவர்கள் எல்லோரையும் சேர்த்தால் கூட பத்து - பனிரெண்டு டெஸ்ட் போட்டிகளில் தான் ஆடி இருக்கிறார்கள்.

யாருன்னே தெரியலை!

யாருன்னே தெரியலை!

உலகக்கோப்பை தொடரின் போது ஒரு தேர்வுக் குழு உறுப்பினரை எனக்கு யார் என்றே தெரியவில்லை. அவரிடம் நீங்கள் யார் என்று நான் கேட்டேன். காரணம், அவர் இந்திய அணியில் கோட் அணிந்து இருந்தார். அவர் நான் ஒரு தேர்வுக் குழு உறுப்பினர் என்றார்.

டீ எடுத்து வரும் வேலை

டீ எடுத்து வரும் வேலை

அவர்கள் அனைவரும் அனுஷ்கா சர்மாவிற்கு (கேப்டன் விராட் கோலியின் மனைவி) டீ எடுத்து வரும் வேலையை தான் செய்தார்கள். என்னைப் பொறுத்த வரை திலிப் வெங்சர்க்கார் போன்ற ஒருவர் தான் தேர்வுக் குழுவில் இடம் பெற வேண்டும் என்றார் பரூக் இன்ஜினியர்.

அதிர்ச்சி விமர்சனம்

அதிர்ச்சி விமர்சனம்

உண்மையாகவே, உலகக்கோப்பை தொடரின் போது தேர்வுக் குழுவினர் அனுஷ்கா சர்மாவிற்கு டீ எடுத்துக் கொண்டு சென்றார்களா? அல்லது அனுஷ்கா சர்மா இந்திய அணித் தேர்வில் பங்கு கொள்கிறார் என அவ்வப்போது வரும் கிசுகிசுவை சுட்டிக் காட்டி இப்படி கூறினாரா? என்பது தெரியவில்லை. ஆனால், இது மிகவும் அப்பட்டமான விமர்சனமாக அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வட்டாரம் இந்த விமர்சனத்தால் அதிர்ந்து போய் இருக்கிறது.

Story first published: Thursday, October 31, 2019, 17:27 [IST]
Other articles published on Oct 31, 2019
English summary
Farokh Engineer reveals selectors getting Anushka Sharma’s cups of tea during World Cup. He also lashes out the selection committee as Mickey Mouse selection committee.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X