எது பேடியா மீது பாய்ந்த தீபக் தாங்க்ரி... கடித்து வைத்த பேடியா... தொடரில் பங்கேற்க தடை!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 92வது போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் எப்சி கோவா மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதின. இந்த போட்டி 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியுள்ளது.

ரிஷப்.. ரிஷப்.. தோனிக்கு இணையாக தூக்கி வைத்து கொண்டாடிய சென்னை ரசிகர்கள்.. உணர்ச்சிவசப்பட்ட பண்ட்!

இதில் எப்சி கோவா அணியின் கேப்டன் எது பேடியா சென்னையின் எப்சி அணியின் மிட் பீல்டர் தீபக் தாங்கிரியை வயிற்றில் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

92வது போட்டி

92வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 92வது போட்டி கோவாவின் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் எப்சி கோவா மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதின. இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடிய நிலையில் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் போட்டி டிரா ஆனது.

2க்கு 2 கோல் கணக்கில் டிரா

2க்கு 2 கோல் கணக்கில் டிரா

இந்த போட்டியில் சென்னையின் அணி சிறப்பான துவக்கத்தை தந்த போதிலும் தொடர்ந்து சிறப்பான தருணங்களை தர தவறியது. ஆனால் கோவா அணி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி போட்டியை டிரா செய்துள்ளது. இதன்மூலம் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

95வது நிமிடத்தில் பரபரப்பு

இதனிடையே போட்டியின் 95வது நிமிடத்தில் பந்தை பிடிப்பதற்காக தீபக் தாங்கிரி மற்றும் எது பேடியா முயற்சி செய்தபோது, சென்னையின் எப்சி மிட் பீல்டர் தீபக் தாங்க்ரி, எது பேடியா மீது பாய்ந்தார். இதையடுத்து அவர் எழ முயற்சி செய்தபோது, எது பேடியா அவரை வயிற்றில் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எது பேடியாவிற்கு தடை

எது பேடியாவிற்கு தடை

இந்த சம்பவம் குறித்து சென்னையின் எப்சி புகார் அளித்துள்ளது. மேலும் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அளித்துள்ள நிலையில், இந்த தொடரின் அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க எது பேடியாவிற்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Chennaiyin started the match as the stronger of the two teams and took the lead
Story first published: Sunday, February 14, 2021, 10:44 [IST]
Other articles published on Feb 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X