For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொந்த சாதனையை முறியடிக்க பெடரர் தயார்!

By Staff

மெல்போர்ன்: கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஆண்டின் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், தனது 20வது பட்டத்துடன், அதிக பட்ச பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் புரிவதற்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தயாராக உள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன், பிரெஞ்ச் ஓபன் ஆகிய நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆண்டில் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் வரும், 15ம் தேதி முதல், 28ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

இந்த ஆண்டு காயம் காரணமாக பலர் விலகியுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான, சுவிட்சர்லாந்தின், 36 வயதாகும் ரோஜர் பெடரர் மீண்டும் பட்டம் வெல்வார் என்று பெரும்பாலானோர் கணித்துள்ளனர்.

29 பைனலில் 19 பட்டம்

29 பைனலில் 19 பட்டம்

இதுவரை 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரர் வென்றுள்ளார். இதுவரை, 51 முறை கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்கு நுழைந்துள்ள அவர், 41 முறை அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். அதில், 29 முறை பைனலுக்கு முன்னேறியுள்ளார்.

2017ல் 7 பட்டங்கள்

2017ல் 7 பட்டங்கள்

கடந்தாண்டு 8வது முறையாக விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், இண்டியானா வெல்ஸ் மாஸ்டர்ஸ், மியாமி ஓபன், ஹாலோ ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ், சுவிஸ் இண்டோர்ஸ் என ஏழு பட்டங்களை பெடரர் வென்றார்.

சொந்த சாதனையை முறியடிப்பவர்

சொந்த சாதனையை முறியடிப்பவர்

வயதாகி விட்டது என்று விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக பட்டம் வென்றவர் என்ற தன்னுடைய சாதனையை தொடர்ந்து முறியடித்து வருகிறார். ஸ்பெயினின் ரபேல் நடால், 16 பட்டங்களைப் பெற்றுள்ளார்.

சாதனை படைக்க வாய்ப்பு

சாதனை படைக்க வாய்ப்பு

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில், மார்க்கரெட் கோர்ட், 24, செரீனா வில்லியம்ஸ், 23, ஸ்டெபி கிராப், 22 ஆகியோர் அதிக பட்டங்களை வென்றவர்கள். இதுவரை எந்த ஆண் வீரரும், 20 பட்டங்களை வென்றதில்லை. அந்த சாதனையை, ஆஸ்திரேலிய ஓபனில் புரிவதற்கு, பெடரருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Saturday, January 13, 2018, 16:50 [IST]
Other articles published on Jan 13, 2018
English summary
Another title waiting for Federer in Australian open
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X