For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டிகள்ல பங்கேற்காம வீட்டுக்குள்ளயே இருக்கறது நமநமங்குது... உடனடியா வெளிய போய் ஆடணும்

சென்னை : போட்டிகளில் பங்கேற்காமல் வீட்டிற்குள்ளேயே இருப்பது மிகவும் கடினமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னணி ஆப்-ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2020 could be hosted outside the India

கொரோனா வைரஸ் ஊடரங்கு காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டில் முடங்கியுள்ளார்.

Feeling itchy, want to go out and play, says Ashwin

இந்நிலையில் சத்குருவுடன் ஆன்லைனில் மேற்கொண்ட இன்டர்வியூவில் தொகுப்பாளராக செயல்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து அஸ்வின் கேட்டறிந்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பிசியாக நாடு நாடாக ஓடிக் கொண்டிருந்த வீரர்கள் தற்போது ஒரே இடத்தில் முடங்கியுள்ளது அவர்களுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி ஆப்-ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் வெளியில் சென்று போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடாமல் வீட்டில் உள்ளது மிகவும் கடினமாக உள்ளதாகவும், போட்டிகளில் பங்கேற்று விளையாட மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் தான் சரியாக இருப்பதாக உணர்ந்ததாகவும், ஆனால் தற்போது மிகவும் கடினமான சூழலில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நான் போன ஐபிஎல்-ல என்ன பண்ணேன்னு யாருக்குமே தெரியலை.. சொல்லக்கூடாத ரகசியத்தை சொன்ன அஸ்வின்நான் போன ஐபிஎல்-ல என்ன பண்ணேன்னு யாருக்குமே தெரியலை.. சொல்லக்கூடாத ரகசியத்தை சொன்ன அஸ்வின்

சத்குருவுடன் மேற்கொண்ட ஆன்லைன் இன்டர்வியூவில் தொகுப்பாளராக செயல்பட்டு, அவரிடம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார் அஸ்வின்.

Story first published: Friday, June 5, 2020, 8:13 [IST]
Other articles published on Jun 5, 2020
English summary
Initially I felt like I was okay, but now I'm getting really itchy -Ashwin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X