For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கும், கோலிக்கும் சண்டையெல்லாம் கிடையாது.. ரவி சாஸ்திரி கருத்து

மும்பை:தோனிக்கும், கோலிக்கும் சண்டையெல்லாம் கிடையாது என்று அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்கிறது. அதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து இதுவரை பல கருத்துகள், விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 4வது வீரராக யாரை களமிறக்குவது, ஜடேஜாவுக்கு இடம் உள்ளதா என பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

தற்போதைய நிலை

தற்போதைய நிலை

இந்நிலையில் அணியின் தற்போதைய சூழல் குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

தயாராக உள்ளோம்

தயாராக உள்ளோம்

உலக கோப்பை போட்டிக்கு மனரீதியாக இந்திய அணி வீரர்கள் தயாராக உள்ளனர். உலக கோப்பைக்கு 15 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால் தற்போது 18 முதல் 20 வீரர்கள் வரை தகுதியுடன் உள்ளனர்.

காயம் குறித்து கவலை

காயம் குறித்து கவலை

ஐபிஎல் முடிந்தவுடன் உலக கோப்பை போட்டி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டியின்போது வீரர்கள் யாராவது காயம் அடைந்தால் அது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கும். அதனால் ஒவ்வொரு போட்டியையும் நான் கூர்ந்து கவனிப்பேன்.

தக்க முடிவு

தக்க முடிவு

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது பற்றி கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் தக்க முடிவு எடுப்பார்கள்.

கட்டுப்படுவோம்

கட்டுப்படுவோம்

மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை பின்பற்றுவோம். ஒருவேளை உலக கோப்பையில் விளையாட வேண்டாம் என்று கூறினாலும் அதற்கு கட்டுப்படுவோம்.

ஜெயிக்க இருக்கிறோம்

ஜெயிக்க இருக்கிறோம்

விராட் கோலியின் ஆக்ரோஷத்தை நான் ஊக்குவிப்பதாக கேள்வி கேட்கிறார்கள். அது உண்மைதான். இங்கு ஜெயிக்கவே வந்திருக்கிறோம். அதனால் கடுமையான ஆட்டத்தை விதிமுறைக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

Story first published: Friday, March 15, 2019, 20:18 [IST]
Other articles published on Mar 15, 2019
English summary
Feud between kohli and dhoni? ravi shastri responds.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X