For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேர்களால் ஏற்பட்ட குழப்பம்.. பிங்க் பால் போட்டியில் உருவான எதிர்பாராத சிக்கல்.. இப்படி கூட நடக்குமா?

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

பிட்ச்

பிட்ச்

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் பிங்க் பால் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இங்கு பீல்டிங் செய்வது கடினம்.

மைதானம்

மைதானம்

மைதானத்தில் இருக்கும் பெரும்பாலான இருக்கைகள் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. இதனால் பிங்க் கலர் பந்து வரும் போது அதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். இருக்கைகள் காரணமாக பந்தை வித்தியாசம் காண்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்.

கடினம்

கடினம்

சையது முஷ்டாக் கோப்பை போட்டியிலும், பிங்க் பாலை வைத்து நடந்த பயிற்சியிலும் இங்கு பீல்டிங் செய்த பலர் இதேபோல் கேட்ச்களை விட்டனர். இங்கு பீல்டிங் செய்யும் போது நிறைய தவறுகள் செய்தனர். இதே தவறுகள் இன்றும் டெஸ்ட் போட்டியில் நடக்க வாய்ப்புள்ளது.

கவனம்

கவனம்

இதனால் இன்று வீரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பந்தை கணிப்பதிலும், அதை பார்ப்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பீல்டிங் இந்திய அணிக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Wednesday, February 24, 2021, 22:21 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
Ind vs Eng: Fielding will be very difficult with the Pink Ball due to seat colors in Ahmedabad ground.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X