For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஞ்சாப் கிங்சின் அதிரடி பார்ட்னர்ஷிப்... அணிக்கு தேவையானதை கணித்து விளையாடிய கேப்டன்

சென்னை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் 2021 தொடரின் 17வது போட்டியில் விளையாடினர்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இன்தியன்ஸ் அணி 131 ரன்களை மட்டுமே அடித்தது.

இந்நிலையில் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

தவானை தொடர்ந்த ஹிட்மேன்... அதிரடி அரைசதம்... அணியை தூக்கி நிறுத்திய கேப்டன்தவானை தொடர்ந்த ஹிட்மேன்... அதிரடி அரைசதம்... அணியை தூக்கி நிறுத்திய கேப்டன்

மும்பை அணி பேட்டிங்

மும்பை அணி பேட்டிங்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே அடித்தது. அணியின் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

இதையடுத்து 132 ரன்களை இலக்காக கொண்டு விளையாடத் துவங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை 6.2 ஓவர்களில் குவித்தனர்.

மயங்க் அவுட்

மயங்க் அவுட்

இருவரும் இணைந்து சேஸிங்கில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். ஆனால் இவர்களது பார்ட்னர்ஷிப்பை தனது அதிரடி பௌலிங்கால் முறியடித்தார் மும்பை இந்தியன்ஸ் பௌலர் ராகுல் சஹர். 25 ரன்களில் மயங்க் அகர்வால் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.

ராகுலுடன் பார்ட்னர்ஷிப்

ராகுலுடன் பார்ட்னர்ஷிப்

இதையடுத்து பீல்ட்டுக்கு வந்தார் யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில். தொடர்ந்து கேஎல் ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியின் ஸ்கோரை சிறப்பாக உயர்த்தினார். சமீபத்தில் தன்னிடம் சரக்குகள் குறையவில்லை என்று இவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ரன் குவிப்பு

அதிரடி ரன் குவிப்பு

ஆனால் சென்னையின் வெப்பத்தை சமாளிப்பதுதான் மிகவும் கடினமானது என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். கேஎல் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் இருவரும் இணைந்து மைதானத்தில் அதிரடி காட்டினர். இவர்கள் ஆட்டத்தில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி என மைதானமே தெறித்தது.

Story first published: Friday, April 23, 2021, 23:22 [IST]
Other articles published on Apr 23, 2021
English summary
Rahul -Gayle great all-round performance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X